ரூ.10,000ல் சாம்சங் புதிய கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்!

By Super
|
ரூ.10,000ல் சாம்சங் புதிய கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்!

சர்வதேச சந்தையில் சாம்சங் ஒய் டியோஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இது ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன். 3.14 இஞ்ச் டிஎப்டி மல்டி டச் தொடுதிரையையும் பெற முடியும்.

வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 240 X 320 பிக்ஸல் திரை வசதியினை கொடுக்கும். இதன் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் விதமாக இதில் 832 மெகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

கியூட்டாக வரும் இந்த ஸஸ்மார்ட்போன் டியூவல் சிம் நெட்வொர்க் வசதியுடன் ஒய் டியோஸ் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் கைகளில் ஜொளிக்கும். இந்த டியோஸ் ஸ்மார்ட்போனில் உள்ள 3 மெகா பிக்ஸல் கேமராவினால் 320 X 240 துல்லியத்தினை பெறலாம்.

எத்தனை புதிய ஸ்மார்ட்போன்கள் வந்தாலும், வாடிக்கையாளர்கள் அடுத்த புதிய தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை எதிர் பார்க்கின்றனர். அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு கேலக்ஸி ஒய் டியோஸ் சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும்.

இதில் 3.5 ஜேக், புளூடூத், யூஎஸ்பி 2.0 போன்ற வசதிகளை தாராளமாக பெறலாம். இதில் ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பொழுதுபோக்கு அம்சங்களையும் ஏராளமாக பெறலாம். இதுவரை மக்களால் பேசப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியலில் இந்த கேலக்ஸி ஒய் டியோஸ் ஸ்மார்ட்போனும் ஒன்றாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,000 ஒட்டிய விலையில் பெறலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X