இது முரட்டுத்தனம்.. 50MP கேமரா.. 4350mAh பேட்டரி.. 2TB மெமரி.. IP68 ரேட்டிங்.. மிலிட்டரி கிரேடு.. எந்த மாடல்?
முரட்டு சாம்சங் பிரியர்கள் விரும்பும்படி மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் புரொடெக்சன் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, 4350mAh பேட்டரி, 2 டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர்7 ப்ரோ (Samsung Galaxy XCover7 Pro) போன் களமிறங்கி இருக்கிறது. இந்த ரக்கட் சாம்சங் கேலக்ஸி மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் போன்களுக்கு நிகரான பீச்சர்களுடன் சாம்சங் மாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், சாம்சங் நிறுவனமானது ஒரு படி மேலே சென்று கடினமான பணிச்சூழலுக்கு ஏற்ப ரக்கட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களை களமிறக்கி வருகிறது. இப்போது, சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர்7 ப்ரோ போனை ரக்கட் பீச்சர்களுடன் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர்7 ப்ரோ அம்சங்கள் (Samsung Galaxy XCover7 Pro Specifications): இந்த சாம்சங் போனில் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) மிலிடிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கிடைக்கிறது. மேலும், IP68 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.
6.6 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) டிஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் விஷன் பூஸ்டர் (Vision Booster) போன்ற வழக்கமான பீச்சர்கள் மட்டுமல்லாமல், ரக்கட் மாடலுக்கு ஏற்றபடி வெட் டச் (Wet Touch), குளோவ் டச் (Glove Touch) சப்போர்ட் கொடுக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆப்ஜெக்ட் எரைசர் (Object Eraser), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) போன்ற ஏஐ பீச்சர்களை கொடுக்கும் சாம்சங் ஒன் யுஐ 17 (Samsung One UI 7) கிடைக்கிறது. அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 7s Gen 3) சிப்செட் கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர்7 ப்ரோ போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இருப்பினும், 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் கிடைக்கிறது. ரக்கட் மாடலாக இருப்பதால், நானோ சிம் (Nano SIM) மட்டுமல்லாமல், ஈசிம் (eSIM) சப்போர்ட் கிடைக்கிறது.
சாம்சங் கினாக்ஸ் வால்ட் (Samsung Knox Vault) மற்றும் ஈஎஸ்இ (eSE) ஆகியவற்றுடன் சாம்சங் கினாக்ஸ் செக்யூரிட்டி கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே சென்சார் கிடையாது, சைடு ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் பேசியல் ரிககனைசேஷன் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர்7 ப்ரோ போனில் 4,350mAh பேட்டரி கிடைக்கிறது. குளோபல் மார்கெட்டில் இப்போது வெளியாகி இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.59,023ஆக இருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி ஐரோப்பிய மார்கெட்டிலும், மே 8ஆம் தேதி யுஎஸ் மார்கெட்டிலும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








