Home
Mobile

நிச்சயமா 1 வாங்குவீங்க.. 50எம்பி கேமரா, IP68 ரேட்டிங்.. LCD டிஸ்பிளே.. 128ஜிபி மெமரி.. எந்த போன்?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் ஏற்கனவே
கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தற்போது சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ஆனது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த முரட்டுத்தனமான போன் "SM-G556B"என்ற மாடல் நம்பரைக் கொண்டுள்ளது. மேலும் ஆன்லைனில் ஏற்கனவே வெளியான சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

நிச்சயமா 1 வாங்குவீங்க.. 50எம்பி கேமரா, IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 அம்சங்கள் (Samsung Galaxy XCover7 Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர் (MediaTek Dimensity 6100+ processor) உடன் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் இந்தியாவுக்கு வரும். இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPu) கிராபிக்ஸ் கார்டு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே (TFT LCD display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 60Hz refresh rate), 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் ( Corning Gorilla Glass Victus+ protection) பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் விற்பனைக்கு வரும்.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) ஆதரவு இதில் உள்ளது. பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொண்டுள்ளது இந்த போன்.

ஒன் யுஐ (OneUI) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல். மேலும் ஃபேஸ் அன்லாக் (Face Unlock), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 50எம்பி ரியர் கேமரா உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயமா 1 வாங்குவீங்க.. 50எம்பி கேமரா, IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

4050எம்ஏஎச் மாற்றக்கூடிய பேட்டரி (4050mAh replaceable battery) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 போன் இந்தியாவில் அறிமுகமாகும். இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (15W fast charging) வசதியும் உள்ளது.

டூயல் சிம், 5ஜி, வைஃபை 5 802.11, வைஃபை, புளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 240 கிராம் ஆகும். அதேபோல் இந்த போனின் விலை குறித்து தகவல் வெளியாகவில்லை. விரைவில் இந்த போனின் விலை வெளியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy XCover 7 will be launched in India soon: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X