Home
Mobile

இது வேற ரகம்.. Dimensity சிப்செட்.. IP68 ரேட்டிங்.. வருகிறது முரட்டுத்தனமான சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்டு போனின் மாடல் நம்பர் SM-G556B என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

IP68 ரேட்டிங்.. வருகிறது முரட்டுத்தனமான சாம்சங் போன்.. எந்த மாடல்?

அதாவது சக்திவாய்ந்த டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்டு போன் வெளிவரும். எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் இதில் உள்ளது.

ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்டு போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

டூயல் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட சிங்கிள் ரியர் கேமரா, வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஐபி68 ரேட்டிங்கையும் (IP68 Rating) கொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்டு போன். சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த போன் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்டு போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்டு போனின் சில அம்சங்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளிவரும். அதேபோல் சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கேலக்ஸி ஏ25 5ஜி போனின் அம்சங்களும் ஆன்லைனில் கசிந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போனில் எக்ஸ்நோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

IP68 ரேட்டிங்.. வருகிறது முரட்டுத்தனமான சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 12ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 13எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Xcover 7 rugged phone spotted on BIS site:check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X