Home
Mobile

இது வேற லெவல்.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ராணுவ தரச்சான்றிதழ் பெற்ற Samsung போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது முரட்டுத்தனமான சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.அமெரிக்க இராணுவத் தரமான MIL-STD-810H ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, குறைந்த மற்றும் உயர்ந்த தீவிர வெப்பநிலையிலும் இதனால் வேலை செய்ய முடியும்.

அதேபோல் இந்த போன் நீரில் மூழ்கினாலும் தாங்கும் திறனை கொண்டுள்ளது மற்றும் இது தூசியை முழுமையாக எதிர்க்கும். குறிப்பாக பல்வேறு சோதனைகளுக்குப் பின்பு தான் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இது வேற லெவல்.. ராணுவ தரச்சான்றிதழ் பெற்ற Samsung போன் அறிமுகம்..

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 அம்சங்கள் (Samsung Galaxy XCover7 Specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே (TFT LCD display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 60Hz refresh rate), 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் ( Corning Gorilla Glass Victus+ protection) பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர் (MediaTek Dimensity 6100+ processor) உடன் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPu) கிராபிக்ஸ் கார்டு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) ஆதரவு இதில் உள்ளது.

ஒன் யுஐ (OneUI) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஃபேஸ் அன்லாக் (Face Unlock), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 50எம்பி ரியர் கேமரா உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இது வேற லெவல்.. ராணுவ தரச்சான்றிதழ் பெற்ற Samsung போன் அறிமுகம்..

4050எம்ஏஎச் மாற்றக்கூடிய பேட்டரி (4050mAh replaceable battery) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (15W fast charging) வசதியும் உள்ளன. பின்பு டூயல் சிம், 5ஜி, வைஃபை 5 802.11, வைஃபை, புளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 240 கிராம் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ஆனது கொரியாவில் வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். இந்த மாதம் இறுதியில் இந்த சாம்சங் போன் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும். பின்பு சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 போனின் விலை வெளியிடப்படவில்லை. விலை வெளியானதும் உடனே அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy XCover 7 Launched with 50MP Camera:check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X