Home
Mobile

எப்படியாவது 1 வாங்குவீங்க.. 50MP கேமரா.. LCD டிஸ்பிளே.. டால்பி அட்மோஸ்.. 2 வருட வாரண்டி.. எந்த போன்?

கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்டு போன் ஆனது இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

அதேபோல் அமெரிக்க இராணுவத் தரமான MIL-STD-810H3 ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, குறைந்த மற்றும் உயர்ந்த தீவிர வெப்பநிலையிலும் இதனால் வேலை செய்ய முடியும். குறிப்பாக POGO சார்ஜிங் பின் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்டு போன். மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

எப்படியாவது 1 வாங்குவீங்க.. 50MP கேமரா.. LCD டிஸ்பிளே.. எந்த போன்?

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்டு அம்சங்கள் (Samsung Galaxy XCover7 specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர் (MediaTek Dimensity 6100+ processor) உடன் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒன் யுஐ (OneUI) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஃபேஸ் அன்லாக் (Face Unlock), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே (TFT LCD display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் ( Corning Gorilla Glass Victus+ protection) பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது
இந்த போனின் டிஸ்பிளே.

குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 50எம்பி ரியர் கேமரா உடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

எப்படியாவது 1 வாங்குவீங்க.. 50MP கேமரா.. LCD டிஸ்பிளே.. எந்த போன்?

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water resistant) கொண்டிருக்கிறது இந்த சாம்சங் போன். மேலும் 4050எம்ஏஎச் மாற்றக்கூடிய பேட்டரி (4050mAh replaceable battery) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 போன் வெளிவந்துள்ளது. டூயல் சிம், 5ஜி, 4ஜி, வைஃபை 802.11 ஏஎக்ஸ், வைஃபை, புளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 240 கிராம் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 போனின் ஸ்டாண்டர்ட் எடிஷன் ( standard edition) விலை ரூ.27,208-ஆக உள்ளது. பின்பு இதன் எண்டர்பிரைஸ் எடிஷன் (Enterprise edition) விலை ரூ.27,530-ஆக உள்ளது. ஸ்டாண்டர்ட் எடிஷன்-க்கு 1 வருட வாரண்டி உள்ளது, இதன் எண்டர்பிரைஸ் எடிஷன்-க்கு 2 வருட வாரண்டி உள்ளது. சாம்சங்.காம் தளத்தில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy XCover 7 Launched in India: check specifications, price, availability
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X