சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!
சாம்சங் நிறுவனம் அசத்தலான அம்சங்களுடன் புதிய கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ரக்கட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த புதிய சாதனம் ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே வாங்க கிடைக்கும்.

இந்த கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போனை கையுறைகளை அணியும்போது கூட பயனர்களால் பயன்படுத்த முடியும். அதாவது க்ளோவ்-டச் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம். பின்பு இந்த சாதனம் 1.5 மீட்டர் ஆழத்தில் நீரில் மூழ்கினாலும் தாங்கும் திறனை
கொண்டுள்ளது மற்றும் இது தூசியை எதிர்க்கும் வசதியுடனும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் குறைந்த மற்றும் உயர்ந்த தீவிர வெப்பநிலையிலும் இந்த சாதனத்தை எளிமையாக பயன்படுத்த முடியும். இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் மாடல் 5.3-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1480x720 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.
கேலக்ஸி எக்ஸ்கவர் 5 சாதனத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸிநோஸ் 850 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது.
கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவு இடம்பெற்றுள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், அமெரிக்கா ராணுவ தரம் MIL-STD 810G போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு கேலக்ஸி எக்ஸ்கவர் 5 சாதனத்தின் விலை 329 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.33,245 ) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








