Home
Mobile

அட்டகாசமான Samsung Galaxy Wide 6 போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் Galaxy Wide 6 ஸ்மார்ட்போனை தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரமான டிஸ்பிளே

தரமான டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி வைடு 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்
1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சூப்பரான சிப்செட் வசதி

சூப்பரான சிப்செட் வசதி

புதிய சாம்சங் கேலக்ஸி வைடு 6 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் OneUI Core 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்.

  50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

சாம்சங் கேலக்ஸி வைடு 6 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி வைடு 6 ஸ்மார்ட்போன். மேலும்
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

சாம்சங் கேலக்ஸி வைடு 6 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி ஆதரவு

5ஜி ஆதரவு

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு உள்ளது. மேலும் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோஜாக் எனப் பல கனெக்டிவிட்டி
ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸமார்ட்போன் மாடல்.

என்ன விலை?

என்ன விலை?

புதிய சாம்சங் கேலக்ஸி வைடு 6 ஸ்மார்ட்போனின் விலை KRW 349,000 (இந்திய மதிப்பில் ரூ.20,200) ஆக உள்ளது. மேலும் இந்த போன் கருப்பு,வெள்ளை மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் சாம்சங் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Wide 6 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X