Home
Mobile

ஜூலை 22-ல் Samsung செய்யப்போகும் சம்பவம்.. ஒரே நேரத்தில் 3 முக்கிய போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்கள்?

சாம்சங் (Samsung) தனது அடுத்த கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்வானது ஜூலை 22 அன்று லண்டனில் நடைபெறும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை போல்டபிள் (Foldable) ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகப்படுத்தப்படவுள்ள தயாரிப்புகள் குறித்து சாம்சங் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், சமீபத்திய லீக்ஸ் மற்றும் நிகழ்வு நடைபெறும் காலம் ஆகியவைகளை கருத்தில் கொண்டால் - கேலக்ஸி இஸட் போல்ட் 8 (Galaxy Z Fold 8), கேலக்ஸி இஸட் போல்ட் 8 அல்ட்ரா (Galaxy Z Fold 8 Ultra), கேலக்ஸி இஸட் பிளிப் 8 (Galaxy Z Flip 8) மற்றும் கேலக்ஸி வாட்ச் 9 (Galaxy Watch 9) ஆகியவைகளின் அறிமுகத்தை உணர்த்துகின்றன.

ஜூலை 22-ல் Samsung செய்யப்போகும் சம்பவம்!

இந்நிகழ்வு சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம், சாம்சங் நியூஸ்ரூம் (Newsroom) மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் (YouTube) சேனலில், இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நேரலையாக ஒளிபரப்பப்படும். அறிமுகத்திற்கு முன்னதாகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் தனது வரவிருக்கும் கேலக்ஸி டிவைஸ்களுக்கான முன்பதிவுகளையும் சாம்சங் தொடங்கியுள்ளது.

முன்பதிவு செய்வது எப்படி? சாம்சங் நிறுவனம், ஜூலை 22 அன்று நடைபெறவிருக்கும் நிகழ்விற்கு முன்னதாக, தனது வரவிருக்கும் கேலக்ஸி டிவைஸ்களுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. தகுதியான சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்கள், சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஒரு டிவைஸை முன்பதிவு செய்யலாம். இதன் மூலம், அந்தந்த பிராந்தியத்தைப் பொறுத்து, பழைய டிவைஸை கொடுத்து புதிய டிவைஸ் வாங்கும் - சலுகைகள், பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் பிற விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்ட வெளியீட்டு நாள் சலுகைகளை பெறலாம்.

இந்தியாவில், நீங்கள் ரூ.999-க்கு #Next Galaxy VIP Pass-ஐ வாங்குவதன் மூலம் ரூ.2,799 மதிப்புள்ள வவுச்சர் மற்றும் அறிவிக்கப்படாத பிற சலுகைகளை பெறலாம். மற்றொரு வழி, இலவசமாக பதிவு செய்வதாகும். இதன் மூலம் பயனர்கள் பரிசளிப்பு போட்டிகளில் பங்கேற்று, தினமும் ரூ.5,000 மதிப்புள்ள வவுச்சர்களை வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள்.

முன்னதாக அறிமுகமான சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7-ன் முக்கிய அம்சங்கள்:
- 8 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே
- 6.5 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்

- 3 எக்ஸ்டர்னல் கேமரா யூனிட்
- குவாட் பிக்சல் ஆட்டோஃபோகஸ், ஓஐஎஸ் ஆதரவு மற்றும் 85-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- கவர் டிஸ்பிளேவில் 10 மெகாபிக்சல் கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் மற்றொரு 10 மெகாபிக்சல் கேமரா

- ஐபி48 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீடு
- 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4400mAh பேட்டரி
- 25W அடாப்டர் மூலம் 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்
- பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவு
- அளவீட்டில் விரிக்கப்பட்ட நிலையில் 4.2 மிமீ தடிமன்; மடிக்கும்போது 8.9 மிமீ தடிமன்
- எடை 215 கிராம்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் அறிமுக விலை விவரங்கள்: 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,74,999. 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,86,999 மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.2,10,999 க்கு அறிமுகம் ஆகின.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Unpacked Event on July 22 Galaxy Z Fold 8 Galaxy Z Fold 8 Ultra Galaxy Z Flip 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X