Home
Mobile

இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க.. Samsung-ன் 3 சிங்கக்குட்டிகள்.. Galaxy S26, S26+, S26 Ultra அறிமுக தேதி!

சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்கள் - இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் எப்போது அறிமுகம் செய்யப்படலாம் என்கிற விவரம் வெளியாகி உள்ளது. இந்த வெளியீட்டிற்கான சரியான தேதியை சாம்சங் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், 2026 ஆம் ஆண்டின் முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் போஸ்டர் லீக் ஆகியுள்ளது.

டிப்ஸ்டர் இவான் பிளாஸ் (Tipster Evan Blass) வெளியிடப்பட்டுள்ள போஸ்டரின்படி சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு, வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று நடைபெறும். இது சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி குறித்த முந்தைய லீக்களுடன் ஒற்றுப்போகிறது.

Samsung Galaxy S26, S26+, S26 Ultra அறிமுக தேதி!

ஆக பிப்ரவரி 25 ஆம் தேதியன்று கேலக்ஸி எஸ்26 சீரீஸின் கீழ் கேலக்ஸி எஸ்26 (Galaxy S26), கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Galaxy S26 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Galaxy S26 Ultra) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். கூடவே சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 (Samsung Galaxy Buds 4) சீரீஸ் மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம்

இந்த சீரிஸின் கீழ் கேலக்ஸி பட்ஸ் 4 (Galaxy Buds 4) மற்றும் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ (Galaxy Buds 4 Pro) மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு வெளியீடான டியாலேப்ஸ் (Dealabs) வழியாக கிடைத்த தகவல்களின்படி - கேலக்ஸி பட்ஸ் 4 மாடல் ஆனது தோராயமாக ரூ.19,600 க்கும் மற்றும் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ மாடல் தோராயமாக ரூ.27,300 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

ரூ.11,000 மலிவான விலைக்கு வரும் கேலக்ஸி எஸ்26 சீரீஸ்: மைக்ரோபிளாக்கிங் தளமான ப்ளூஸ்க்கை சோஷியல் (Bluesky Social) வழியாக டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்டின் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) மாடல் ஆனது கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலை விட (இந்திய ரூபாய் மதிப்பின்படு) தோராயமாக ரூ.11,000 விலை குறைவாக இருக்கும்.

இந்த விலை மாற்றம் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 256GB மற்றும் 512GB ஆப்ஷன்களுக்கு பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ஐரோப்பாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,62,000 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ.1,51,000 க்கு தொடங்கலாம்.

இருப்பினும் டாப்-எண்ட் 1டிபி ஆப்ஷனின் விலை அதன் முன்னோடியை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது தோராயமாக ரூ. 2,04,000 ஆக இருக்கலாம். இதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களின் விலைகள் அப்படியே இருக்கலாம் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார்.

குறிப்பிடத்தக்க வண்ணம் ஐரோப்பாவில் கேலக்ஸி எஸ்25 மற்றும் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தோராயமாக ரூ.1,01,000 மற்றும் ரூ.1,28,000 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆக சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களும் இதே போன்ற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ57, சாம்சங் கேலக்ஸி ஏ37 (Samsung Galaxy A57, Samsung Galaxy A37): இந்த ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்26 ஃபிளாக்ஷிப் சீரீஸ் உடன் கூடுதலாக, சாம்சங் நிறுவனம் பிப்ரவரியில் இந்த இரண்டு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை வெளியிடலாம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Unpacked Event 2026 Invite Leak It Shows Galaxy S26 Series Launch Date As February 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X