Home
Mobile

Galaxy Unpacked 2026.. வருது கேலக்ஸி இசட் போல்டு 8.. கேலக்ஸி இசட் ஃபிளிப் 8.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?

சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த போல்டு மற்றும் ஃபிளிப் ஸ்மார்ட்போன் பிரியர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் கேலக்ஸி அன்பேக்டு 2026 (Galaxy Unpacked 2026) இவென்ட் இன்று நடக்கிறது. இதில் என்னென்ன மாடல்களை எதிர்பார்க்கலாம், லைவ் ஸ்ட்ரீமிங்கை எப்படி பார்க்கலாம், உள்ளிட்ட விவரங்கள் இதோ.

கேலக்ஸி அன்பேக்டு 2026 இவென்ட்டானது, இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. லண்டனில் இருந்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளம் மற்றும் வெப்சைட் ஆகியவற்றில் லைவ் ஸ்ட்ரீமிங்கை பார்க்கலாம். இதில் போல்டு, ஃபிளிப் மற்றும் வாட்ச் மாடல்கள் வருகின்றன.

Galaxy Unpacked 2026.. வருது கேலக்ஸி இசட் போல்டு 8.. என்னென்ன வருது?

சாம்சங் இசட் போல்டு 8 சீரிஸ் (Samsung Galaxy Z Fold 8 Series), சம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 (Samsung Galaxy Z Flip 8) மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், சாம்சங் கேலக்ஸி வாட்ச் 9 சீரிஸ் (Samsung Galaxy Watch 9 Series) மாடல்களும் வெளியாக வாய்ப்புள்ளது. ப்ரீ-ரிசர்வ் செய்து கொள்ளலாம். சாம்சங் தளத்தில் இதை செய்ய முடியும்.

சாம்சங் இசட் போல்டு 8 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதில் 5.5 இன்ச் கவர் டிஸ்பிளே மற்றும் 7.6 இன்ச் மெயின் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ( Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் கொண்ட மாடல்கள் வெளியாக இருக்கின்றன.

மேலும், 256 ஜிபி மெமரி, 512 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி மெமரி கொடுக்கப்பட இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இந்த சாம்சங் இசட் போல்டு 8 கிடைக்க இருப்பது தெரிகிறது. 4800mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 25W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட இருக்கிறது. எஸ் பென் ஸ்டைலஸ் (S Pen Stylus) சப்போர்ட் கொடுக்கப்பட இருக்கிறது. சம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் பீச்சர்களை பொறுத்தவரை 6.9 இன்ச் ஃபிளிப் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட இருக்கிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4.1 இன்ச் கவர் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. சாம்சங் எக்ஸினோஸ் 2600 (Samsung Exynos 2600) சிப்செட் கிடைக்க வாய்ப்புள்ளது. 12 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் வெளியாக இருக்கிறது. ஒன் யுஐ 9 (One UI 9) பேஸ்டு ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொடுக்கப்பட இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 10 எம்பி செல்பீ கேமராவை கொடுக்க இருக்கிறது. 4300mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.1,43,083 பட்ஜெட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலும் குளோபல் மார்கெட்டிலும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Unpacked 2026 Expected To Unveil Galaxy Z Fold 8 Series Galaxy Z Flip 8 How To Watch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X