Home
Mobile

2025 பொங்கல் முடிஞ்ச கையோட Galaxy S25 சீரீஸ்.. பிரமிக்க வைக்கும் Project Moohan.. Samsung மாஸ்டர் பிளான்!

2025 ஆம் ஆண்டின் மிக முக்கியமான டெக் ஈவென்ட்களில் ஒன்றாக பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வானது (Samsung Galaxy Unpacked 2025 Event) எப்போது நடக்கும்? இந்நிகழ்வின் போது என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்? என்கிற விவரங்கள் நம்பகமான டிப்ஸ்டர் ஒருவர் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு எப்போது நடக்கும்? எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் ஆல்வின் (@sondesix) பகிர்ந்துள்ள தகவலின்படி சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வை ஜனவரி 22 ஆம் தேதி நடத்தலாம். சாம்சங் நிறுவனத்தின் இந்த வருடாந்திர நிகழ்வானது இந்திய நேரடி இரவு 11:30 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Galaxy S25 சீரீஸ்.. பிரமிக்க வைக்கும் Project Moohan.. Samsung பிளான்

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வானது, சான் ஜோஸ், கலிபோர்னியாவில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமையகத்தில் நடக்கலாம். டிப்ஸ்டர் ஆல்வினின் இந்த லீக் ஆனது ஏன் நம்பக்கூடியதாக இருக்கிறது என்றால்.. இவர் கூறும் தேதியானது கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வின் "பரிந்துரைக்கப்பட்ட டைம்லைன்" ஆன ஜனவரி 23 உடன் கிட்டத்தட்ட ஒற்றுப்போகிறது.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி அன்று நடந்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் தான் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதேபோல ஜனவரி 22 ஆம் தேதி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸை அறிமுகப்படுத்தும், இது இந்நிகழ்வின் தனித்துவமான அறிவிப்புகளில் ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸின் கீழ் கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழவில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அதன் எக்ஸ்ஆர் ஹெட்செட்டும் கூட காட்சிப்படுத்தப்படலாம். ப்ராஜெக்ட் மூஹன் என்று அழைக்கப்படும் இது, அதிநவீன காட்சிகள், பாஸ்த்ரூ திறன்கள் மற்றும் மல்டி மாடல் இன்புட்களுக்கான ஆதரவுடன் பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? முந்தைய கசிவுகளின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்25 மாடலின் பேஸிக் 12ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.67,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

அடுத்ததாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.84,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் டாப்-ஆஃப்-தி-லைன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,10,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்

சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சமீபத்திய லீக்ஸ் தகவலின்படி கேலக்ஸி எஸ்24 சீரீஸை போலவே இதுவும் 45W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். கூடவே ஸ்டாண்டர்ட் கேலக்ஸி எஸ்25 மாடலுக்கான வயர்லெஸ் சார்ஜிங்கில் குறிப்பிடத்தக்க தரமிறக்கம் இருக்கும்.
உள்ளது, இது அதன் முன்னோடியின் 15W இலிருந்து 9W ஆக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடல்கள் ஆனது EP-T2510 என பெயரிடப்பட்ட டிராவல் அடாப்டர்களைப் பயன்படுத்தும், இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். முந்தைய மாடல்களை போலவே, சாம்சங் நிறுவனம் அதன் ரீடெயில் பாக்ஸ்களில் சார்ஜிங் அடாப்டர்களை சேர்க்காது, பயனர்கள் அவற்றை தனியாக (அதாவது தனியாக பணம் செலுத்தி தான்) வாங்க வேண்டும்.

இதுதவிர்த்து மூன்று மடல்களுமே 5ஜி கனெக்ட்விட்டி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிஎன்எஸ்எஸ் மற்றும் என்எப்சி கியவை இடம்பெறும். இருப்பினும், அல்ட்ரா-வைட்பேண்ட் (UWB) ஆதரவானது கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடல்களில் மட்டுமே இருக்கும்.

சிப்செட்டை பொறுத்தவரை, இந்த சீரீஸ் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் எக்ஸினோஸ் 2500 சிப்செட் ஆனது எஸ்25 சீரீஸில் இடம்பெற வாய்ப்பில்லை. அனைத்து மாடல்களும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 7 உடன் இயங்கும் என்பதை சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை பேஸிக் மற்றும் பிளஸ் மாடல்களில் சிறிய அளவிலான மேம்பாடுகள் மட்டுமே இருக்கும். ஆனால் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் (பழைய மாடலில் உள்ள) 12எம்பி அல்ட்ரா-வைட் கேமராவிற்கு பதிலாக 50எம்பி சென்சார் என்கிற அப்கிரேட் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி இது 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் மேம்பட்ட டெலிஃபோட்டோ லென்ஸ்கள் ஆகியவற்றை தக்க வைத்துக் கொள்ளும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Unpacked 2025 Event Expected on January 22 Galaxy S25 Series Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X