Home
Mobile

சாம்சங்கின் கேலக்ஸி ட்ரெண்ட் மொபைல் செம...!

By Keerthi

அடிக்கடி பல புது மொபைல்களை சந்தைக்கு கொண்டு வரும் நிறுவனமான சாம்சங்கின் இப்போதைய பேவரட் மொபைல் எது என்றால் அது சாம்சங்கின் கேலக்ஸி ட்ரெண்ட் தான்

ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் சிப், 3ஜி தொடர்பு, இரண்டு சிம் இயக்கம் ஆகியவை இதன் தனிச் சிறப்புகள் எனலாம். இதன் பரிமாணம் 121.5 x 63.1 x 10.85 மிமீ ஆகும். எடை 128.5 கிராம்.

நான்கு அங்குல அளவிலான, டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை இதில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை-பி, வை-பி ஹாட்ஸ்பாட் தொழில் நுட்பம் மற்றும் யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை கிடைக்கின்றன.

இதில் 3 எம்.பி.கேமரா மட்டும் தரப்பட்டுள்ளது. இதில் எப்.எம். ரேடியோ இல்லை. அக்ஸிலரோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் இயங்குகின்றன இதன் விலை ரூ.7,999 ஆகும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சாம்சங்கின் கேலக்ஸி ட்ரெண்ட் மொபைல் செம...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ்மெயில் மற்றும் ஆர்.எஸ்.எஸ். வசதிகள் உள்ளன. எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் இயங்குகின்றன. டாகுமெண்ட்வியூவர் தரப்பட்டிருப்பதால், டாகுமெண்ட்களைப் பார்த்து திருத்தவும் முடியும்.

இத்துடன் ஆர்கனைசர், இமேஜ் மற்றும் வீடியோ எடிட்டர், வாய்ஸ் மெமோ டயல், பிரிடெக்டிவ் டெக்ஸ்ட் அமைப்பு, கூகுள் சர்ச், மேப்ஸ், டாக்ஸ், யுட்யூப், காலண்டர், கூகுள் டாக் மற்றும் பிகாஸோ பயன்படுத்த நேரடி இணைப்புகள் கிடைக்கின்றன.

இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது.

நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X