புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 10.5 சிறப்பம்சங்கள்

By Meganathan
|

நீண்ட காலமாக டேப்ளட் சந்தையை ஆண்டு வந்த ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் முதலிடம் வகிக்கின்றது அனைவரும் அறிந்ததே. ஆப்பிள் நிறுவன டேப்ளட்களுடன் போட்டியிடவே முடியாது என்றும் கூறுவர். இந்த நிலையை மாற்றி ஆப்பிள் நிறுவனத்திற்கு சிறந்த போட்டியை ஏற்படுத்த சாம்சங் நிறுவனம் தனது டேப்ளட் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ் வகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 10.5 சிறப்பம்சங்கள்

10.5 மற்றும் 8.4 இன்ச் டிஸ்ப்ளேகளில் புதிய கேலக்ஸி டேப் வெளியிடப்பட்டுள்ளது. ஏஎம்ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் சக்திவாய்ந்த தொழில்நுட்பம் கேலக்ஸி டேப் எஸ் மாடலை உலகளவில் நல்ல வரவேற்பை பெற வித்திட்டது. ஒவ்வொரு டேப்ளட்டும் இரு நிறங்களில் கிடைக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி சேப் எஸ் 10.5 டிஸ்ப்ளே மற்றும் இயங்குதிறன்

கேலக்ஸி எஸ் 5 போன்றே கேலக்ஸி டேப் எஸ் 10.5 மாடலும் அழகாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்தவரையில் ஏற்கனவே வெளியான சாம்சங் மாடல்களை போன்றே காட்சியளித்தாலும் உபயோகிக்கும் போது நல்ல அனுபவத்தை கொடுத்தது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 10.5 சிறப்பம்சங்கள்

6.6 எம்.எம் தட்டையாக இருக்கும் இந்த டேப்ளட் ஆப்பிள் ஐ பேட் ஏர், ஐ போன் 5 எஸ் மற்றும் சோனி எக்ஸ்பீரியா இசட்2 டேப்ளட்களை விட ஒல்லியாக இருக்கின்றது. சுற்றிலும் மெட்டாலிக் ப்ரேம் மூலம் கேலக்ஸி டேப் எஸ் 10.5 வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம் கார்டு மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டுகள் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய சேப் எஸ் 10.5 சாம்சங் கேலக்ஸி எஸ் 5 மாடலை விட நன்கு தயாரிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 10.5 மாடலின் சிறப்பம்சம் 2560*1600 பிக்சல் டிஸ்ப்ளேவுடன் கைரேகை சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 10.5 சிறப்பம்சங்கள்

கேலக்ஸி டேப் 10.5 ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓ.எஸ் மற்றும் சாம்சங்கின் டச்விஸ் பொருத்தப்பட்டுள்ளதோடு கஸ்டம் யூசர் இன்டர்பேஸ் மாற்றப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 5 மாடலோடு ஒப்பிடும் போது இதில் மல்டி யூசர் மோட், கிட்ஸ் மோட் மற்றும் யூசர் இன்டர்பேசுடன் பிரெத்யேக அப்ளிகேஷன்களும் உள்ளது.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/F0ZoS2txyU0?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

English summary
Samsung Galaxy tab s 10.5 thinner than i pad air

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X