ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் உடன் கேலக்ஸி டேப் ஏ 9.7.!

|

ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்டு தொடங்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 9.7 ஆனது இப்போது வைஃபை சான்றிதழ் தளமான வைஃபை அலியன்ஸில் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் உடன் காணப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் மூலம் சாம்சங் சமீபத்திய மென்பொருளை பரிசோதிப்பதும், விரைவில் புதிய இயங்குதளம் கொண்டு புதிய சாதனம் ஒன்றினை வெளியிடலாம் என்று நம்பப்படுகிறது.

வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் சார்ந்த விவரக்குறிப்பில் இருந்து இக்கருவி இரட்டை-பேண்ட் வைஃபை ஏ/ பி / ஜி / என் (2.4ஜிகாஹெர்ட்ஸ், 5ஜிகாஹெர்ட்ஸ்) மற்றும் வைஃபை டைரக்ட் இணைப்பு அம்சங்களை ஆதரிக்கிறது. துரதிருஷ்டவசமாக, இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தால் இயக்கப்படும் என்பதைத் தவிர வெரி எந்த குறிப்பும் கிடைக்கப்பெறவில்லை.

நௌவ்கட் மேம்படுத்தல்

நௌவ்கட் மேம்படுத்தல்

எஸ்எம-டி 550 ஏன மாடல் எண் கொண்டு டபுள்யூஎப்ஏ59137 தரம் பெற்றுள்ள இந்த சாதனம், ஜூலை 27 ஆம் தேதி அன்று சான்றளிக்கப்பெற்றுள்ளது என்பதையும் வெளியான அறிக்கை காட்சிப்படுத்துகிறது. இந்த சாதனத்திற்கு வைஃபை சான்றிதழ் கிடைத்துவிட்டது என்பதால், விரைவில் நௌவ்கட் மேம்படுத்தல் பெறுமென்று எதிர்பார்க்கிறோம்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

இந்த டாப்ளெட் ஆனது முதலில் அண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம் கொண்டு தொடங்கப்பட்டது. பின்னர் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயக்க முறைமைக்கு மேம்படுத்தப்பட்டது. சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 9.7 அம்சங்களை பொறுத்தமட்டில் 9.7 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே (1024x768 பிக்சல்கள் தீர்மானம்) கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது.

ரேம்

ரேம்

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் இந்த சாதனம் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. 16 ஜிபி உள் சேமிப்புடன் 2 ஜிபி ரேம் கொண்டுள்ள இந்த சாதனம் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஸ்லாட் ஒன்றும் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

சாம்சங் கேலக்ஸி டீப் ஏ 9 சாதனத்தின் கேமரா துறையை பொறுத்தமட்டில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. மேலும் இது வைஃபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது. அளவீட்டில், 242.5 x 166.8 x 7.5 மிமீ மற்றும் 487 கிராம் எடை கொண்டுள்ள இந்த டாப்ளெட் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A 9.7 spotted with Android Nougat. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X