Home
Mobile

சாம்சங் மற்றும் ஸ்வைப் டேப்லட்கள் ஒப்பீட்டு அலசல்!

சாம்சங் மற்றும் ஸ்வைப் டேப்லட்கள் ஒப்பீட்டு அலசல்!

சாம்சங் கேலக்ஸி டேப்-2 பி-3100 மற்றும் ஸ்வைப் வெலாசிட்டி டேப் என்ற இந்த டேப்லட்களின் தொழில் நுட்ப வசதிகளின் ஒப்பீடு பற்றியும இங்கே கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

இந்த 2 டேப்லட்களுமே ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டதாக தான் இருக்கும். ஆனால் இதன் வெர்ஷன்கள் வேறுபடுகிறது. ஸ்வைப் டேப்லட் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும், சாம்சங் டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் வழங்கும். வெலாசிட்டி டேப் டியூவல் கோர் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸரினையும், சாம்சங் கேலக்ஸி டேப்-2 டேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரினையும் கொடுக்கும்.

இந்த டேப்லட்களும் டியூவல் கேமரா வசதிக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் இருக்கும். சாம்சங் கேலக்ஸி டேப் 2 பி-3100 டேப்லட் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் விஜிஏ முகப்பு கேமராவினையும் கொடுக்கும். வீடியோ ரெக்கார்டிங், ஸ்வைப் டேப்லட் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும சிறப்பாக வழங்கும். இதனால் அழகான புகைப்படங்கள், வீடியோ ரெக்கார்டிங், வீடியோ காலிங் வசதி ஆகிய வசதிகளை சிறப்பாக பெற முடியும்.

ஸ்வைப் டேப்லட் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரி, ஸ்டோரேஜ் எக்ஸ்பேண்டபில் ஸ்டோரேஜ் வசதியாக 32 ஜிபி மெமரி வசதி வரை பெறலாம். கேலக்ஸி டேப்-2 டேப்லட் 8 ஜிபி இன்டர்னல் வசதி மற்றும் 32 ஜிபி எக்ஸ்பேண்டபில் மெமரி வசதியினையும் சிறப்பாக கொடுக்கும்.

ஸ்வைப் வெலாசிட்டி டேப் வைபை நெட்வொர்க் மற்றும் 3ஜி டோங்கில் ஆகிய வசிதக்கு சிறப்பாக துணைபுரியும். கேலக்ஸி டேப்-2 டேப்லட்டிலும் வைபை மற்றும் ப்ளூடூத் வசதியினையும் சிறப்பாக பெறாலம். இன்னும் கேலக்ஸி டேப்லட் 4,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரிக்கும் மற்றும் 20 மணி நேரம் டாக் டைமிற்கும் சிறப்பாக வசிதக்காக வழி வகுக்கும்.

ஸ்வைப் டேப் டேப்லட்டில் 4,500 எம்ஏஎச் பேட்டரி ஆற்றலை பயன்படுத்தலாம். இதில் 10 மணி நேரம் பேக்கப் டைமினை பெறலாம். ஸ்வைப் வெலாசிட்டி டேப் ரூ. 11,490 விலையினையும் மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப்-2 டேப்லட்டில் ரூ. 19,300 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

இந்த செய்தியினை ஆங்கிலத்திலும் படிக்கலாம்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X