சாம்சங்கா இல்லை மைக்கிரோமேக்ஸா!! கடும் போட்டி

|

உலக அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் சாம்சங்கின் ஸ்மார்ட்போன்கள் தான் முன்னிலையில் உள்ளன. சாம்சங்கிற்க்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னிலையில் இருக்கும் நிறுவனம் என்றால் அது மைக்கிரோமேக்ஸே.

மைக்கிரோமேக்ஸின் ஸ்மார்ட்போன்கள் சாம்சங்கிற்க்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. சாம்சங் நிறுவனம் அதிக விலையில் ஹை ரேஞ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டாலும் அதை அதிக விரும்புவதில்லை. பெரும்பாலான மக்கள் தொகை பட்ஜெட்டுக்கு ஏற்ற மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்கள் தான்.

இந்த பிரிவில் சாம்சங்கிற்க்கும் மைக்கிரோமேக்ஸிற்க்கும் போட்டி நிலவுகிறது. சொல்லப்போனால் இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன் பிரிவுகளில் மைக்கிரோமேக்ஸ் ரவுண்டு கட்டி விளையாடுகிறது எனலாம். குறைந்த விலைக்கேற்ற தரமான ஸ்மார்ட்போன்களை வழங்குவது மைக்கிரோமேக்ஸின் மிகப்பெரிய பலமாக மாறி வருகிறது.

சாம்சங்கின் கேலக்ஸி மெகா 5.8க்கு போட்டியாக மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டூடில்2வை வெளியிட்டது. இப்பொழுது மைக்கிரோமேக்ஸின் போல்ட் ஏ40க்கு போட்டியாக சாம்சங் சைலன்டாக கேலக்ஸி ஸ்டார் புரோவை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1

4இன்ஞ் டிஸ்பிளே,
1GHZ பிராசஸர்,
512எம்பி ராம்,
4ஜிபி மெமரி,
2 மெகாபிக்சல் கேமரா,
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
டியுல் சிம்
1500mAh பேட்டரி

#2

#2

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் புரோவின் விலை ரூ.6989 ஆகும்.

#3

#3

4.5இன்ஞ் டிஸ்பிளே,
1GHZ பிராசஸர்,
512எம்பி ராம்,
512எம்பி மெமரி,
2 மெகாபிக்சல் கேமரா,
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
ஆன்டிராய்ட் 2.3.5 ஓஎஸ்
டியுல் சிம்
1500mAh பேட்டரி

#4

#4

மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40யின் விலை ரூ. 5,299 ஆகும்

#5

#5

இப்பொழுது இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கிடையே உள்ள நிறை குறைகளை பின்வரும் சிலைட்களில் பார்ப்போம்.

#6

#6

கேலக்ஸி ஸ்டார் புரோவில் 4ஜிபி இன்டர்னல் மெமரி உள்ளது. மைக்கிரோமேக்ஸில் 512எம்பி மெமரி தான் உள்ளது. ஆனால் இரண்டிலும் எக்ஸ்பேண்டபுள் மெமரி 32ஜிபி வரை உள்ளது.

#7

#7

கேலக்ஸி ஸ்டார் புரோவில் ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ் உள்ளது ஆனால் மைக்கிரோமக்ஸில் ஆன்டிராய்ட் 2.3.5 ஓஎஸ் தான் உள்ளது இருந்தாலும் இரண்டிலும் ராம் ஒரே அளவே உள்ளன.

#8

#8

மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40யில் 4.5 இன்ஞ் டிஸ்பிளே உள்ளது ஆனால் சாம்சங்கில் 4 இன்ஞ் டிஸ்பிளே தான் உள்ளது.

#9

#9

மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40யில் பிரண்ட் கேமரா உள்ளது ஆனால் சாம்சங்கில் பிரண்ட் கேமரா இல்லை. இரண்டிலும் பேக் கேமரா 2 மெகாபிக்சல்கள் உள்ளன.

#10

#10

மற்றபடி இரண்டிலும் பிராசஸர் மற்றும் பேட்டரி திறன்கள் இரண்டிலும் கிட்டதிட்ட ஒரே அளவில் தான் உள்ளன.

#11

#11

கேலக்ஸி ஸ்டார் புரோவின் விலை கிட்டதிட்ட ரூ.7,000 (ரூ.6989) வருகிறது. மைக்கிரேமக்ஸின் போல்ட் ஏ40யின் விலை ரூ.5,300 தான்.

குறைந்த விலைக்கேற்ற தரமான ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால் நீங்கள் மைக்கிரோமேக்ஸை வாங்கலாம் இதில் டிஸ்பிளேவின் அளவு பெரிதாக உள்ளது மற்றும் பிரண்ட் கேமராவும் உள்ளது.

விலை அதிகம் ஆனாலும் பரவாயில்லை கொஞ்சம் லேட்டெஸ்டான ஓஎஸ் மற்றும் அதிக இன்டர்னல் மெமரியுடன் போன் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் சாம்சங்கை வாங்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X