நீங்கள் மிகவும் எதிர்பார்த்த சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

|

சாம்சங் நிறுவனம் அதன் 10-ம் ஆண்டு கேலக்ஸி கொண்டாட்டத்தை முன்னிட்டு மிகவும் எதிர்பார்த்த ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேணடும்.

டிசம்பர் 30-ம் தேதி வரை

டிசம்பர் 30-ம் தேதி வரை

இப்போது இந்நிறுவனம் அறிவித்துள்ள விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இந்த சிறப்பு சலுகை வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை அனைத்து தளங்களிலும் செல்லுபடியாகும். மேலும் இப்போது விலைகுறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ30எஸ்

கேலக்ஸி ஏ30எஸ்

சாம்சங் நிறுவனம் வழங்கும் இந்த விற்பனையில் விலையில் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,999-க்கு கிடைக்கிறது, பின்பு இந்நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாடல் ஆனது ரூ.19,999-க்கு கிடைக்கிறது.

கேலக்ஸி ஏ50எஸ்

கேலக்ஸி ஏ50எஸ்

அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் ரூ.21,999-க்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி உடன் டீரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அப்படியெல்லாம் போக முடியாது: அனில் அம்பானி ராஜினாமாவை நிராகரித்த கடன்தாரர்கள்அப்படியெல்லாம் போக முடியாது: அனில் அம்பானி ராஜினாமாவை நிராகரித்த கடன்தாரர்கள்

கேலக்ஸி ஏ70எஸ்

கேலக்ஸி ஏ70எஸ்

சாம்சங் நிறுவனத்தின் சிறந்த ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படவில்லை, ஆனால் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.1,999-மதிப்புள்ள ப்ளூடூத் ஹெட்செட் ஒன்று இலவசமாக கிடைக்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10இ

கேலக்ஸி எஸ்10இ

அதேபோல் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் ஆனாது ரூ.8,000என்கிற மிகப்பெரிய விலைகுறைப்பை பெறுகிறது,இதன் மூலம் ரூ.47,990க்கு விற்க்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் கேஷ்பேக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ்

கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ்

மேலும் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது முறையே ரூ.5,000 மற்றும் ரூ.4000கேஷ்பேக் சலுகையுடன் வாங்க கிடைக்கின்றன. தவரி எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.6,000 கேஷ்பேக்கையும் பெறலாம்.

கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படவில்லை, ஆனால் எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.6,000-கேஷ்பேக் பெறமுடியும். கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விலை ரூ.69,999-ஆக உள்ளது. பின்பு கேலக்ஸி நோட் 10 பிளஸ் சாதனத்தின் விலை 79,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Special Offer: Massive Discounts on Galaxy S10e, Galaxy Note 10 and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X