புதிய அப்டேஷனை பெறும் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன்!

By Super
|
புதிய அப்டேஷனை பெறும் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன்!

கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனை வழங்குகிறது சாம்சங் நிறுவனம். கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கையில், கேல்கஸி-2 ஸ்மார்ட்போனுக்கு ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய வெர்ஷனான ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன் உலகில் தனி இடத்தை பிடித்தது. அதன் பிறகு கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன், ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் ஆர்வத்தினையும் தன் பக்கம் எளிதாக திருப்பியது.

அதிகமான வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்தது மட்டும் அல்லாமல், சாம்சங் நிறுவனத்தின் வருவாயினை அதிகப்படுத்தியது கேலக்ஸி எல்-3 ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விற்பனையை முறியடிக்குமா அடுத்து வரும் கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் என்ற கேள்வி அனைவரின் முன்பு வைக்குப்பட்டுள்ளது. இதற்கு பதில் கூடிய விரைவில் கிடைக்கும். சூப்பர் அமோலெட் திரை தொழில் நுட்பம் கொண்ட கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் அகன்ற திரை

வசதியினை கொண்டது.

2 மகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும், 8 மெகா பிக்ஸல் மெயின் கேமராவினை கொண்டு சிறந்த புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும் இந்த கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் வசதி வழங்கப்பட்டுவிட்டால், இந்த ஸ்மார்ட்போனில் இன்னும் புதிய தொழில்

நுட்ப வசதிகளை பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனை வழங்குவதாக சாம்மொபைல் வலைத்தளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த புதிய அப்டேஷன் வசதியினை வாடிக்கையாளர்கள் கொஞ்சம் பொருத்திருந்து பெறுவது சிறந்தது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X