அடுத்துவரும் சாம்சங் எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் : மாற்றமா.? ஏமாற்றமா.?

|

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஆகிய சாதனங்களில் இன்னிபினிட்டி டிஸ்ப்ளே தொடங்கப்பட்டதிலிருந்து அந்த அம்சம் பரவலாக புகழ் பெற்றுள்ளன. இந்த அம்சம், 5.8 அங்குல மற்றும் 6.2 அங்குலம் போன்ற பெரிய அளவிலான திரை கைபேசிகளை கூட ஒப்பீட்டளவில் கைக்கு அடக்கமான ஒரு கருவியாக்குகிறது.

இந்நிலைப்பாட்டில், ஒரு புதிய அறிக்கை நம்பப்படுமானால் சாம்சங் நிறுவனம் இப்போது அதே திரை அளவுகளில், இதே போன்ற இன்னிபினிட்டி டிஸ்ப்ளே கொண்டு அதன் வரவிருக்கும் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 + ஸ்மார்ட்போன்களில் வளைந்த வடிவமைப்பு பயன்படுத்துமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் கருவிகளான கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை பற்றிய தொகுப்பே இது.

டிஸ்பிளே உற்பத்தி

டிஸ்பிளே உற்பத்தி

கேலக்ஸி S9 மற்றும் கேலக்ஸி S9 + ஸ்மார்ட்போன்களில் இருக்க வேண்டிய காட்சி அளவுகள் பற்றிய விவரங்களை, ஏற்கனவே சாம்சங் நிறுவனம் அதன் அலகிற்கு தெரிவித்துள்ளது என்கிறது ஒரு அறிக்கை.

அப்படியே பின்பற்றி

அப்படியே பின்பற்றி

அப்படியாக கேலக்ஸி எஸ்9 அந்த ஒரு 5.77 இன்ச் டிஸ்ப்ளே கொண்டும் மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆனது ஒரு 6.22 அங்குல டிஸ்ப்ளே கொண்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, சாம்சங் நிறுவனம் எந்த விதமான மாற்றங்களையும் செய்யாமல், புது முயற்சிகளை எடுக்காமல் அதன் முந்தைய மாதிரிகளை அப்படியே பின்பற்றி அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

ஆன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர்

ஆன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர்

மேலும், வரும் கருவிகளில் இன்பினிட்டி டிஸ்ப்ளே திரும்பவும் இடம் பெறுவதால் கருவியின் முன்பக்கம் ஹோம் பொத்தான் இடம்பெறாது எனவும் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் மீது மிகவும் பழைய அம்சமாக கருதப்படும் கைரேகை கைரேகை சென்சாருக்கு பதிலாக, ஆன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் ஒன்றை பொருத்தும் முயற்சியை முன்னெடுக்கலாம்.

6.32 அங்குல டிஸ்ப்ளே

6.32 அங்குல டிஸ்ப்ளே

இந்த ஆன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் அம்சம் கேலக்ஸி எஸ்8 மாதிரிகளில் மற்றும் வரவிருக்கும் கேலக்ஸி நோட் ஆகியவற்றிலும் இடம்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவாரசியமாக நிறுவனத்தின் 6.32 அங்குல டிஸ்ப்ளேவை அடுத்த ஆண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம் என லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாபகப்படுத்த வேண்டுமெனில், கேலக்ஸி நோட் 8 வரும் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

வெளியீடுகள் தொலைவில் இருப்பதால்

வெளியீடுகள் தொலைவில் இருப்பதால்

இந்த கசிவுகள், சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கான சரியான காட்சி அளவைக் கண்டறிந்துள்ளது எனக் குறிப்பிட்டாலும் இக்கருவிகள் சார்ந்த வெளியீடுகள் தொலைவில் இருப்பதால், இந்த தகவல்களை சிட்டிகையில் இருந்து உப்பை எடுக்கும் அளவே எடுத்துக்கொள்ள தயங்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 Tipped to Sport Same Size, Shape of Infinity Display as Galaxy S8. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X