"சூப்பர் ஸ்பீடு" கேமராவுடன் அசத்தும் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்.!
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் க்யுஎச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் வெளிவந்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2018-ல் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏ.கே.ஜி-ட்யூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பகுதிக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் சூப்பர் ஸ்லோ-மோ மோட் மற்றும் "சூப்பர் ஸ்பீடு" கேமரா இடம்பெற்றுள்ளது,இது பயனர் சூழலுக்கு பொருந்தக்கூடிய புகைப்படங்களை மிக அருமையாக எடுக்கும் திறமைக் கொண்டவை. பிக்சல் 2எக்ஸ்எல், ஐபோன் 7 மற்றும் ஐபோன்8 ஸ்மார்ட்போன்களில் இந்த "சூப்பர் ஸ்பீடு" கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு பயனர்கள் விரும்பும் செல்பீ புகைப்படங்களுக்கு தகுந்தபடி இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சூப்பர் அமோல்ட் :
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் க்யுஎச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் IP68- சான்றளிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறமைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்.

வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு :
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது.

டூயல் ரியர் கேமரா:
இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய ஏஎப் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சென்சார்கள்:
இந்த ஸ்மார்ட்போனில் சென்சார்கள், இயர்போன் ஜாக், செல்பீ கேமரா போன்றவை இடம்பெறுவதால் சிறய அளவு பெசல்கள் வைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications