நீங்கள் தரும் பணத்திற்கு மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போன்: சாம்சங் கேலக்ஸி எஸ்9+

  கேலக்ஸி எஸ்9+ இல் ஒரு பிரகாசமான திரை, சிறந்த கேமரா ஹார்ட்வேர், புதிய சிப்செட், மேம்பட்ட ஆடியோ மற்றும் கையாளுவதற்கு ஏற்ற
  பொருத்தமான கைரேகை ஸ்கேனர் ஆகியவை காணப்படுகின்றன. இந்த மறுசீரமைப்புகளின் மூலம் சிறந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின்
  போட்டியில் கேலக்ஸி எஸ் வரிசைக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. இந்த புதிய கேலக்ஸி ஃபோனில் செய்யப்பட்டுள்ள சிறியளவிலான
  மாற்றங்கள், கேலக்ஸி எஸ்9+ யை அதிக கச்சிதமாகவும் பயன்படுத்த எதுவாகவும் மாற்றியுள்ளது எனலாம்.

  தற்போது கேமராவின் கீழே கைரேகை ஸ்கேனர் வைக்கப்பட்டுள்ளதால், அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ப ஸ்மார்ட்போனை எளிதாக லாக் திறக்க அதிக
  சவுகரியமாக உள்ளது. இப்போது கூட உங்கள் ஆட்காட்டி விரல், கேமரா லென்ஸை சில நேரங்களில் மறைக்கிறது. ஆனால் அதை பயன்படுத்த ஆரம்பித்தால், லென்ஸுற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் ஸ்மார்ட்போனின் லாக் திறக்க பழகிவிடும். கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி எஸ்8+ காட்டிலும், சாம்சங் கேலக்ஸி எஸ்9+ சற்று எடை அதிகமாக உள்ளது என்றாலும், திரையின் மேற்பகுதி மற்றும் கீழ்பகுதியில் சற்று விரிவுப்படுத்தப்பட்டு, திரை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  பிக்ஸ்பை பொத்தானில் இடமாற்றம் இல்லை

  பிக்ஸ்பை பொத்தானை பொறுத்த வரை, வழக்கம் போல ஒலியளவு கட்டுப்படுத்தும் பொத்தான்களை ஒட்டியே அமைந்துள்ளது. இதனால் ஒலியை
  குறிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, தவறுதலாக லாக் ஆகிவிடுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன்களைப் போலவே, இந்த புதிய
  முன்னணி சாதனமும் ஐபி68-யை கொண்டு, நீர் மற்றும் தூசினால் ஏற்படும் பாதிப்புகளை ஒரு அளவிற்கு தவிர்க்கிறது. இது தவிர, தரமான கருப்பு
  நிற வகையில் அளிக்கப்படும் புதிய கேலக்ஸி எஸ்9+, லிலாக் பர்பிள் மற்றும் கோரல் ப்ளூ நிறங்களில் கிடைக்கின்றன. பொதுவாக, பழைய வடிவமைப்பி
  லேயே இருந்தாலும், கேலக்ஸி எஸ்9+ மற்றும் சிறிய எஸ்9 ஆகியவற்றை கையில் பிடிப்பிற்கு மேலும் உறுதியாக தெரிகிறது.

  சிறந்த திரை

  6.2-இன்ச் சூப்பர் அமோல்டு இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே-யை கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்9+, கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி ஃபோன்களை விட பிரகாசமாக உள்ளது. மேலும் நேரடி சூரிய வெளிச்சத்திலும், சாம்சங் உருவாக்கிய ஓஎல்இடி பேனலை பயன்படுத்தும் ஐபோன் எக்ஸ் கூட இதன் செயல்பாட்டில் தோற்று போகும் அளவிற்கு இது அதிக பிரகாசத்தை வெளியிடுகிறது.


  இதன் டிஸ்ப்ளேயில் 2960x1440 பிக்சல் கொண்ட பகுப்பாய்வுடன் 18.5:9 விகிதத்தில் பிரித்து அளிக்கப்படுகிறது. இதன்மூலம் 529பிபிஐ வெளியீடு கிடைப்பதால், வீடியோக்கள், எழுத்துக்கள், படங்கள் என்று அனைத்தும் சிறப்பாகவும் கச்சிதமாகவும் உள்ளன. அதிக நிறத்தன்மையுடன் கூடிய திரையை கொண்ட ஹெச்டிஆர்10 டிஸ்ப்ளே-யை கொண்டு பேசில்கள் குறைக்கப்பட்டு, உற்பத்தி, மல்டிமீடியா ப்ளேபேக் மற்றும் படிப்பதற்கு ஏற்ப திரை
  பெரிதுப்படுத்தப்பட்டுள்ளது.

  குறைந்த ஒளியில் படப்பிடிப்பிற்கு ஏற்ற கேமரா

  ஒளி குறைந்த சூழ்நிலையில் சிறந்த செயல்பாட்டை அளிக்கும் வகையில், இந்த கேமராவிற்கு இரட்டை-துளை தொழில்நுட்பம் உதவுகிறது. கேலக்ஸி எஸ்9+ இல் உள்ள இரட்டை-லென்ஸ் கேமரா மூலம் குறைந்த ஒளி சூழ்நிலையில் படங்களை எடுக்க முயற்சித்த போது, மற்ற எந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை விட மிக எளிதாக இருந்தது. மேலும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் அளிக்கும் குறைந்த ஒளி சூழ்நிலையில் கேமராவின்செயல்பாட்டை ஒட்டியும், அதைவிட சிறப்பாகவும் இருந்தது. இதில் உள்ள இரட்டை துளை தொழில்நுட்பம் மூலம் ஒரு மனித கண்ணின் கருவிழியைப் போல கேமராவின் லென்ஸை குறுக்கவும் விரிக்கவும் முடிகிறது.

  இவை எஃப்1.5 / எஃப்2.4 அளவில் அமைந்து, ஒளி சூழ்நிலைக்கு ஏற்ப வெளிச்சத்தை கூட்டவும் குறைக்கவும் செய்து கொள்கின்றன. ஸ்மார்ட்போன் கேமராக்களிலேயே உலகில் முதல் முறையாக இதில் எஃப்/1.5 துளை மூலம் 28% கூடுதல் ஒளி மற்றும் ஒளி நிலையை 4-பிரேம்
  பட குவியலிடுதல் தொழில்நுட்பத்தை (இமேஜ் ஸ்டேக்கிங் டெக்னாலஜி) பயன்படுத்தி குறைத்து, சிறந்த மங்கலான மற்றும் குறைந்த ஒளி சூழ்நிலை படங்களை அளிக்க முடிகிறது. எஃப்/2.4 துளை லென்ஸ் மூலம் பொக்கே படப்பிடிப்பு மேம்படுத்தப்பட்டு, லைவ் ஃபோக்கஸ் முறையில் படமெடுப்பு களத்தின் ஆழத்தை சிறப்பாக காட்டுவதை கவனம் செலுத்தி, உடனடியாக செயல்படுகிறது.

  பிரகாசமான செல்ஃபீ

  ஆட்டோபோக்கஸ் உடன் கூடிய இதில் 8எம்பி செல்ஃபீ கேமரா மூலம் பிரகாசமான முகத்தோற்றத்தை பெற முடிவதோடு, இதில் உள்ள பியூட்டி முறை மூலம் தோலின் நிறத்தை மாற்றவும் முடியும். மேலும் ஒரு தளர்ந்த 960 எஃப்பிஎஸ் மூலம் மிகவும் மெதுவான அசைவுடன் கூடிய படங்களைப் பெற முடிகிறது. சோனியின் பிரிமியம் எக்ஸ்இசட் ஃபோன்களில் அறிமுகம் செய்யப்பட்ட மிகவும் மெதுவான நகர்வு கொண்ட வீடியோக்களை எடுக்க உதவும் திறனை விட, சிறப்பாகவும் பிரகாசமாகவும் உள்ளது. இதனோடு ஓஐஎஸ் சிறப்பாக வேலை செய்து தொலைவில் உள்ள பொருட்களையும் படப்பிடித்தாலும், படத்தின் தரம் குறைவதில்லை. இந்த கேமராவில் 60 எஃப்பிஎஸ்-ல் 4கே பதிவு செய்ய செய்ய முடியும் என்றாலும், ஓஐஎஸ் மற்றும் டிராக்கிங் வேலை செய்யாது. அதற்கு 30எஃப்பிஎஸ்-ல் 4கே என்று பகுப்பாய்வை குறைக்க வேண்டும்.

  ஹார்ட்வேரை பொறுத்த வரை, நவீன எக்ஸிநோஸ் 9810 சிப்செட் காணப்படுகிறது. வரைபடம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைக்
  கையாளும் வகையில், 18-கோர் மாலி-ஜி72 ஜிபியூ உடன் இணைந்த சாம்சங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான ஆக்டா-கோர் செயலியை கொண்டுள்ளது.பன்முக பணிகளை கையாளும் வகையில், கேலக்ஸி எஸ்9-ல் 4ஜிபி ரேமும் கேலக்ஸி எஸ்9+ இல் 6ஜிபி ரேமும் அளிக்கப்படுகிறது. ஒரு மைக்ரோஎஸ்டி
  கார்டை பயன்படுத்தி இந்த சாதனங்களின் நினைவகத்தை 400ஜிபி வரை விரிவாக்க முடியும். 10 என்எம் செயலி மூலம் கட்டமைக்கப்பட்ட புதிய சிபியூ, தற்போதைய சந்தையில் விரைவாக செயல்படும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எஸ்9+யை நிலை நிறுத்துகிறது.

  சிறந்த ஆடியோ மற்றும் சிறந்த பேட்டரி திறன்

  சாம்சங் கேலக்ஸி எஸ்9+ ஆடியோ செயல்பாட்டிற்காக புதிய ஸ்டிரீயோக்களை கொண்டு, ஒலி அமைப்பை சிறப்பாக அளிக்கிறது. இவை ஏகேஜி ஒலியியல் மூலம் டியூன் செய்யப்பட்டு, டால்பி அட்மோஸ் 360-கோணத்தில் சுற்றுபுற ஒலியை ஆதரிக்கிறது.

  கேலக்ஸி எஸ்9+ பேட்டரி திறனை பொறுத்த வரை, ஒரு நாள் முழுவதும் செயல்பட சற்று சிரமப்படுகிறது. இதில் உள்ள 3,500 எம்ஏஹெச்-சிற்கு பதிலாக 4,000 எம்ஏஹெச் பேட்டரியை அளித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும் முந்தைய கேலக்ஸி சாதனங்களை விட, விரைவு சார்ஜிங் திறன் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது.

  சாஃப்ட்வேர் திறன்களின் முழுமையான பயன்பாடு:

  இந்த புதிய கேலக்ஸி சாதனம், ஆன்ட்ராய்டு 9.0 யூஐ-யை கொண்டு செயல்படுகிறது. உங்கள் அனுதின மொபைல் பயன்பாட்டு அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்றும் வகையில், இதில் பல பயனுள்ள சாஃப்ட்வேர்களை உட்படுத்தி உள்ளது. உங்கள் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைப் பாதுகாக்க,
  சாம்சங்கின் நவீன பாதுகாப்பு தளமான மேம்பட்ட கேஎன்ஓஎக்ஸ் 3.1 பெற்றுள்ளது. இதில் கண் கருவிழி, கைரேகை மற்றும் முகபாவனை கண்டறிதல்
  என்ற மூன்று விதமான பயோமெட்ரிக் தேர்வுகள் உள்ளன.

  பிக்ஸ்பை மீது கவனம் தேவை

  இப்போது பிக்ஸ்பை-யை, கேமராவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த இடத்தில் அல்லது எதன் மீது கேமராவிற்கு இலக்கு நியமிக்கிறீர்கள் என்று கண்டறிந்து, தேவையான தகவல்களை அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு உணவில் உள்ள ஊட்டச்சத்து பொருட்களைக் கண்டறியலாம்.
  எந்தொரு வெளிநாட்டு மொழியையும் உள்ளூர் மொழிக்கு மொழிபெயர்ந்து தகவலை பெற அதன் மீது கேமராவை காட்டினால் போதும். இதன் முடிவுகள் எப்போதும் சரியாக இருப்பதில்லை என்பதால், அதன்மீது சற்று கவனமாக செயல்பட வேண்டியுள்ளது.

  கேமரா அப்ளிகேஷனில் ஏஆர் இமோஜி

  ஐபோனில் இருப்பது போல, இதில் உங்கள் படத்தை ஸ்கேன் செய்து, வெவ்வேறு விதமான ஜிஐஎஃப்-களை உருவாக்குகிறது. மேலும் வங்கிகள், ஐபிஐ
  பேமெண்ட்கள், கிஃப்ட் கார்டு ஸ்டோர்கள் மற்றும் தடையின்றி கட்டணங்களைச் செலுத்தும் தேர்வு ஆகியவற்றுடன் புதிய கூட்டுறவை அமைத்துள்ள
  சாம்சங் பே, கேலக்ஸி எஸ்9+ இல் காணப்படுகிறது.

  முடிவு

  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆகியவை 64ஜிபி வகையாக, முறையே ரூ.57,900 மற்றும் ரூ.64,900 என்ற விலை நிர்ணயத்தில் வந்துள்ளன. இந்த புதிய ஸ்மார்ட்போனின் 256ஜிபி வகைகள், முறையே ரூ.65,900 மற்றும் ரூ.72,900 என்ற விலை நிர்ணயத்தில் அளிக்கப்படுகின்றன. இந்த விலை அதிகமாக தெரிந்தாலும், இதன் முன்னோடியில் இருப்பதை விட, சிறந்த கேமரா, சிறப்பான டிஸ்ப்ளே, பிரிமியம் மற்றும்
  நீண்டு நிற்கும் வடிவமைப்பு, பன்முகப் பணிகளுக்காக கூடுதல் ரேம் உடன் கூடிய ஒரு விரைவான சிப் ஆகியவை அளிக்கப்படுகின்றன.


  அதே நேரத்தில் தரமான 3.5எம்எம் ஹெட்போன் மற்றும் நினைவகத்தை 400 ஜிபி ஆக விரிவாக்கம் செய்ய உதவும் மைக்ரோஎஸ்டி ஆகியவற்றை அளித்து மல்டிமீடியா பிரச்சனை நீக்குகிறது. இது போன்ற பயனுள்ள அடிமட்ட அம்சங்கள், ஐபோன் எக்ஸ் மற்றும் கூகுள் பிக்சல் 2எக்ஸ்எல் ஆகியவற்றில் கிடைப்பதில்லை. சுருக்கமான கூறினால், இன்றைய இந்திய சந்தையில் அளிக்கும் பணத்திற்கு ஏற்ப மதிப்புள்ள ஸ்மார்ட்போனாக, சாம்சங் கேலக்ஸி எஸ்9+ காணப்படுகிறது எனலாம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Samsung Galaxy S9 plus Review The best just got better; Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more