கான்செப்ட்: ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்9பிளஸ்.!
இந்த கேலக்ஸி எஸ்9பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கைரேகை சென்சார், பிக்ஸ்பை, ஐரிஸ் ஸ்கேனர், பெசல்லெஸ் போன்ற அட்டகாசமான சிறப்பம்சங்கள் இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம், மேலும் சாம்சங் அதன் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் 2018-ம் ஆண்டு துவகத்தில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கேலக்ஸி எஸ்9பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை லாஸ் வேகாஸில் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எஸ்9பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி எஸ்9பிளஸ்:
ஆப்பிள் போன்களுக்கு போட்டியாக வருகிறது அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்9பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 845 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

கைரேகை சென்சார்:
இந்த கேலக்ஸி எஸ்9பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கைரேகை சென்சார், பிக்ஸ்பை, ஐரிஸ் ஸ்கேனர், பெசல்லெஸ் போன்ற
அட்டகாசமான சிறப்பம்சங்கள் இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

டிஸ்பிளே:
இக்கருவி 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பெசல்லெஸ் அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்சார்கள்:
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா மற்றும் சென்சார்கள், இயர்போன் ஜாக், செல்பீ கேமரா போன்றவை இடம்பெறுவதால் சிறய அளவு பெசல்கள் வைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
இக்கருவி 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல்சிம், வைஃபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

90-சதவீதம்:
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 90-சதவீதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications