ஆண்ட்ராய்டு ஓரியோ, 4ஜிபி ரேம் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி.!

இதெப்படி சாத்தியம்.? சாம்சங் நிறுவனம் வழக்கமாக பேசிக் மாடல் மற்றும் ப்ளஸ் மாடல் என்ற இரண்டு வேரியன்ட்களை மட்டும் தானே அறிமுகம் செய்யும்.?

|

சாம்சங் நிறுவனம் அதன் சமீபத்திய தலைமை ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலைப்பாட்டில், தரச்சான்றிதழ் தளமான கீக்பென்ச்சில், மாடல் எண் SM-G8750 என்கிற பெயரின்கீழ் ஒரு புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்போன் காணப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ, 4ஜிபி ரேம் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி.!

இதெப்படி சாத்தியம்.? சாம்சங் நிறுவனம் வழக்கமாக பேசிக் மாடல் மற்றும் ப்ளஸ் மாடல் என்ற இரண்டு வேரியன்ட்களை மட்டும் தானே அறிமுகம் செய்யும்.? மூன்றாவதாக ஒரு எஸ்9 ஸ்மார்ட்போன் எப்படி வெளியாகும்.? அப்படி வெளியானால் எது என்ன பெயரின்கீழ் வெளியாகும்.?

நிச்சயமாக வெளியாகி விடும்.!

நிச்சயமாக வெளியாகி விடும்.!

அது கேலக்ஸி எஸ்9 மினி என்கிற பெயரின்கீழ் வெளியாகும். ஆம், பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் கேலக்ஸி மினி தொடர் இந்த ஆண்டு நிச்சயமாக வெளியாகி விடும் என்பது போல் தெரிகிறது. கீக்பென்ச் தளத்தில் வரவிருக்கும் இந்த மினி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் சில பட்டியலிடப்பட்டுள்ளது.

4ஜிபி அளவிலான ரேம்.!

4ஜிபி அளவிலான ரேம்.!

சிங்கிள் கோர் டெஸ்டில் 1619 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டில் 5955 புள்ளிகளையும் பெற்றுள்ள கேலக்ஸி S9 மினி ஆனது, வெளியான பட்டியலின்படி 4ஜிபி அளவிலான ரேம் மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடனான 1.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி கொண்டு இயங்கும்.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை.!

விலை மற்றும் கிடைக்கும் தன்மை.!

ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட இந்த எஸ்9 மினி பற்றிய விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய எந்த தகவலும் இல்லை. கேலக்ஸி மினி ஸ்மார்ட்போன் பற்றிய லீக்ஸ் தகவல் வெளியாவது ஒன்றும் முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாகவே மினி பதிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டு வருவதும் பின்னர் தள்ளிப்போவதும் வழக்கம் தான்.

ரூ.10,910/- குறைக்கப்பட்டு.!

ரூ.10,910/- குறைக்கப்பட்டு.!

இதற்கிடையில், சாம்சங் நேற்று இந்தியாவில் அதன் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் மீதான விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஆனது ரூ.57,900/-க்கு பதிலாக ரூ.49,990/-க்கு வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்8+ ஆனது ரூ.10,910/- குறைக்கப்பட்டு, ரூ.53,990/-க்கு வாங்க கிடைக்கிறது. அதன் அசல் விலை ரூ.64,900/- ஆகும். கேலக்ஸி எஸ்8 பிளஸ்-ன் 128ஜிபி மாடல் தற்போது ரூ.70,900/-க்கு பதிலாக ரூ.64,900/-க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 Mini with Android Oreo said to be in works. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X