சாம்சங் பிரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்; பல நாள் கனவு நிறைவேற போகிறது.!

மாறாக ட்ரீம் லைட் என்கிற பெயரில் வெளியாகும் என்கிறது லான்ஸ்டன் ஸ்டுடியோவில் காணப்பட்டுள்ள ஒரு பட்டியல்.

|

கடந்த வாரம் ஒரு டூயல் கேமரா அமைப்பு கொண்ட எஸ்9 ஸ்மார்ட்போன் ஆனது கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டது. அது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு எஸ்9- மினி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று நம்பப்பட்டது. காணப்பட்ட அந்த ஸ்மார்ட்போன் ஆனது, மாடல் SM-G8750 என்ற பொதுவான பெயரைக் கொண்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படியாக, சாம்சங் நிறுவனத்தின் தலைமை ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்9-ன் ஒரு சிறிய பதிப்பு, அதாவது மினி வெர்ஷன் இம்முறையாவது வெளியாகுமா என்கிற ஆர்வம் கிளம்பியுள்ள நிலைப்பாட்டில் என்கிற, ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.

மாறாக ட்ரீம் லைட் என்கிற பெயரில் வெளியாகும்.!

மாறாக ட்ரீம் லைட் என்கிற பெயரில் வெளியாகும்.!

சமீபத்திய வதந்திகள் நம்பப்பட வேண்டும் என்றால், கூறப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி வெளியாகாது. அதாவது மினி என்கிற பெயரில் வெளியாகாது என்று அர்த்தம். மாறாக ட்ரீம் லைட் என்கிற பெயரில் வெளியாகும் என்கிறது லான்ஸ்டன் ஸ்டுடியோவில் காணப்பட்டுள்ள ஒரு பட்டியல்.

எஸ் வரிசையின் ஒரு பகுதியாக இருக்காது.!

எஸ் வரிசையின் ஒரு பகுதியாக இருக்காது.!

இந்த ஸ்மார்ட்போன், சாம்சங் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் எஸ் வரிசை ஸ்மார்ட்போன்களின் ஒரு பகுதியாக இருக்கும் என்ற உண்மையை இந்த தகவல் தள்ளுபடி செய்துள்ளது, பொய் என்று நிரூபித்துள்ளது. முன்னதாக வெளியான மாடல் எண் SM-G8750 தகவலும் தற்போது வெளியாகி உள்ள மாடல் எண் SM-G8850 தகவலும் வேறு வேறு என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

ஸ்னாப்டிராகன்  660-க்கு பதிலாக 845 இடம்பெறும்.!

ஸ்னாப்டிராகன் 660-க்கு பதிலாக 845 இடம்பெறும்.!

தற்போது காணப்பட்டுள்ள ட்ரீம் லைட் ஸ்மார்ட்போன் ஆனது "சிஎன் சீனா" ப்ளூடூத் சான்றிதழை கொண்டு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சீனாவை பிரத்தியேக விற்பனை சந்தையாக கொண்டு தயாரிக்கிறது என்பது போன்றும் தெரிகிறது. AnTuTu மற்றும் Geekbench-ல் வெளியான தகவலின்படி, இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660-க்கு பதிலாக ஸ்னாப்டிராகன் 845 இடம்பெறும் என்று அறியப்படுகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு.!

4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு.!

இது தவிர, ட்ரீம் லைட் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஆனது QHD+ தரம் கொண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அது ஒரு 1080 x 2220 பிக்சல் தீர்மானம் கொண்டு வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இதர பிரதான அம்சங்களை பொறுத்தவரை, 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.

மல்டி-கோர் டெஸ்டில் 5955 புள்ளிகள்.!

மல்டி-கோர் டெஸ்டில் 5955 புள்ளிகள்.!

பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் கேலக்ஸி மினி தொடர் இந்த ஆண்டு நிச்சயமாக வெளியாகி விடும் என்பது போல் தான் தெரிகிறது. முன்னதாக வெளியான கீக்பென்ச் தள பட்டியலின் படி, இதன் சிங்கிள் கோர் டெஸ்டில் 1619 புள்ளிகளும், மல்டி-கோர் டெஸ்டில் 5955 புள்ளிகளும் காணப்பட்டுள்ளது. மேலும் வெளியான பட்டியலின்படி 4ஜிபி அளவிலான ரேம் மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடனான 1.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி கொண்டு இயங்கும்.

முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.!

முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.!

ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட இந்த எஸ்9 மினி பற்றிய விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய எந்த தகவலும் இல்லை. கேலக்ஸி மினி ஸ்மார்ட்போன் பற்றிய லீக்ஸ் தகவல் வெளியாவது ஒன்றும் முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாகவே மினி பதிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டு வருவதும் பின்னர் தள்ளிப்போவதும் வழக்கம் தான்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 Mini will probably be named Dream-Lite. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X