Home
Mobile

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் & 4ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 மினி.!

சாம்சங் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த கேல்க்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் கேல்க்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

By Prakash S

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 மினி.!
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 மினி.!

மேலும் சாம்சங் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த கேல்க்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் கேல்க்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்ட 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனின் மாடல் எண் எஸ்எம்-ஜி8850 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5.6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் இவற்றுள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் அசத்தலான செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போன் வெளிவரும்

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், சென்சார் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 மினி.!

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு வீடியோ கால் அழைப்புகள் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்;

How to Find a domain easily for your business (TAMIL)

கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.35,000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 Mini Specs Confirmed by AnTuTu Listing Snapdragon 660 SoC 4GB RAM in Tow; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X