2018 : இன்ஃபினிட்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9.!
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 டிஸ்பிளே அல்லது 6.2-இன்ச் சூப்பர் அமோல்ட் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் 2018-ஆண்டு துவகத்தில் கேலக்ஸி எஸ்9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பெசல்லெஸ் இன்ஃபினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பபை இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலில் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது, அதன்பின் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் விட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

90-சதவீதம்:
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 90-சதவீதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஜனவரி :
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் வரும் 2018- ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 டிஸ்பிளே அல்லது 6.2-இன்ச் சூப்பர் அமோல்ட் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சென்சார்கள்:
இந்த ஸ்மார்ட்போனில் சென்சார்கள், இயர்போன் ஜாக், செல்பீ கேமரா போன்றவை இடம்பெறுவதால் சிறய அளவு பெசல்கள் வைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவகம்:
இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845:
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும்
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications