Home
Mobile

ரெடி ஆகிக்கோங்க.! உங்களை குறிவைக்கிறது சாம்சங் கேலக்ஸி எஸ்9 & எஸ்9 ப்ளஸ்.!

கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒரு காப்புரிமையானதும் வருகிற அடுத்த தலைமுறை கேலக்ஸி எஸ் தொடர் ஸ்மார்ட்போன்களில் முன்பக்க ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் கொண்டு வரலாம் என்பதை வெளிப்படுத்துகிறது.

By Muthuraj

சாம்சங் நிறுவனம் இந்தாண்டு வெளியிட்ட அதன் முதன்மை கருவிகளான கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ ஆகிய ஸ்மார்ட்போன்களின் அடுத்தகட்ட மாறுபாடு சார்ந்த பணிகளை ஆரம்பித்துவிட்டது என்பதை நாம் அறிவோம். ஆம். நாம் இங்கு பேசுவது சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்களை பற்றி தான்.!

தென் கொரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஆன சாம்சங் அடுத்த ஆண்டு அதன் புத்தம்புதிய இரண்டு முதன்மை சாதனங்களைத் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அது கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.

எஸ்8 மற்றும் எஸ்8+ போலல்லாமல்

எஸ்8 மற்றும் எஸ்8+ போலல்லாமல்

சமீபத்தில் வெளியானதொரு புதிய அறிக்கை இந்த ஆண்டு வெளியான எஸ்8 மற்றும் எஸ்8+ போலல்லாமல், கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆனது ஒரு பின்புறம்-ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் கொண்டு வராமல் முன்பக்கம் கொண்டு வரும் என்று அறிவித்துள்ளது.

முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும்

முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும்

கேலக்ஸி கிளப்பில் இருந்து வரும் அறிக்கையின் கீழ் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆனது முன்பக்கம் எதிர்கொள்ளும் கைரேகை சென்சார் வரும் என்று கூறுகிறது. கேலக்ஸி எஸ்8 உடன் ஒப்பிடும்போது இதுவொரு முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும்.

முன்பக்க ஏற்றப்பட்ட கைரேகை சென்சார்

முன்பக்க ஏற்றப்பட்ட கைரேகை சென்சார்

வெளியான அறிக்கையை தவிர, தென்கொரிய நிறுவனத்தால் கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒரு காப்புரிமையானதும் வருகிற அடுத்த தலைமுறை கேலக்ஸி எஸ் தொடர் ஸ்மார்ட்போன்களில் முன்பக்க ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் கொண்டு வரலாம் என்பதை வெளிப்படுத்துகிறது.

கைரேகை ஸ்கேனரில் மாற்றம்

கைரேகை ஸ்கேனரில் மாற்றம்

இணையத்தில் பரவிக் கொண்டிருக்கும் பல தகவல்களின் அடிப்படையில், கேலக்ஸி எஸ்8 தொடரின் கைரேகை சென்சார் வசதியுடன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதுவே எஸ்9 தொடரில் கைரேகை ஸ்கேனரில் மாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கலாம்.

முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும்.

முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 தொடர் கருவிகளில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவிகள் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். அது உண்மையாகினில் இந்த சிப்செட் கொண்டு இயங்கும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 845, எக்ஸிநோஸ் 9 ஆக்டா

ஸ்னாப்டிராகன் 845, எக்ஸிநோஸ் 9 ஆக்டா

6ஜிபி கொண்ட எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் மொத்தம் இரண்டு வகைகள் வெளியாகலாம் அதாவது ஒன்று ஸ்னாப்டிராகன் 845 கொண்டும் மற்றொன்று எக்ஸிநோஸ் 9 ஆக்டா மூலம் இயங்கலாம். இருப்பினும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விவரமும் சாம்சங் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தை

தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தை

மேலும் இக்கருவிகள் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன், இரண்டு சேமிப்பு வகைகளில்பே வெளியாகலாம் என்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 256 ஜிபி மாறுபாடானது, தென் கொரியா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தைகளை மட்டுமே தாக்கக்கூடும் மற்றும் இந்தியாவுக்கு வராது.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018

எஸ்9 மற்றும் எஸ்9 + ஆகிய இரண்டுமே - செயல்திறன், கேமரா மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் அடிப்படையில் எஸ்8 தொடர் போன்களைவிட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் கசிந்த ஒரு அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆனது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அறிமுகப்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 may come with front-facing fingerprint sensor: Report. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X