அசத்தும் அம்சங்கள் கொண்ட இது - சாம்சங் கேலக்ஸி அல்ல, அதுக்கும் மேல.!

|

அடுத்த சில வாரங்களில் இந்த ஆண்டு முடிவடையும் நிலைப்பாட்டில், சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஆண்டு பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பற்றிய வதந்திகள் ஏராளமான முறையில் பரவுகின்றன. அவைகளில் மிகவும் பிரதானமான மற்றும் பிரபலமான கருவியாக சாம்சங் கேலக்ஸி எஸ்9 திகழ்கிறது.

அசத்தும் அம்சங்கள் கொண்ட இது - சாம்சங் கேலக்ஸி அல்ல, அதுக்கும் மேல.!

புகைப்படம் : பிஜிஆர்

வருகிற 2018-ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதன் பிளஸ் மாறுபாடுடன் இணைந்து வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், எஸ்9 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய அதிக விவரங்கள் கொண்ட லீக்ஸ் தகவல்கள் கிடைக்கவில்லை. அந்த குறையை தீர்த்து வைக்கும் வண்ணம் தற்போதொரு சுவாரசியமான புதிய எஸ்9 லீக்ஸ் வெளியாகியுள்ளது.

பெரிய வடிவமைப்பை பெறும்

பெரிய வடிவமைப்பை பெறும்

இந்த புதிய அறிக்கையை கடந்த லீக்ஸ் தகவல்களோடு ஒப்பிடும்போது சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய வடிவமைப்பை பெறும் என்பது வெளிப்படையாக தெரிகிறது. மேலும் சாம்சங் தன்னுடைய சொந்த முக அடையாள அங்கீகார அம்சத்தை எஸ்9 சாதனத்தில் செயல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐரிஸ் ஸ்கேனர் மேம்படுத்தல்

ஐரிஸ் ஸ்கேனர் மேம்படுத்தல்

ஆம். நீங்கள் நினைப்பது சரிதான். கோரப்படும் இந்த அம்சம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ்சில் காணப்பட்ட ட்ரூ டிப்த் அம்சத்துடன் ஒற்றுப்போகும். ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் முக அங்கீகார அம்சத்திற்கு சவால் விடும் வண்ணம் சாம்சங் தனது ஐரிஸ் ஸ்கேனரை மேம்படுத்துவதாக முந்தைய அறிக்கை தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

செங்குத்து அமைப்பிலான இரட்டை கேமரா

செங்குத்து அமைப்பிலான இரட்டை கேமரா

மேலும் வெளியான சமீபத்திய தகவலின்படி, சாம்சன் கேலக்ஸி எஸ்9 ஆனதுஅதன் பின்புறத்தில் கிடைமட்டமாக செங்குத்து அமைப்பிலான இரட்டை கேமராவை கொண்டுவருமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேமராவின் மற்ற விவரங்கள் தபற்றிய வார்த்தைகள் இல்லை.

கிட்டத்தட்ட உறுதி

கிட்டத்தட்ட உறுதி

மிங் சி கோவ் (கேஜிஐ செக்யூரிட்டிஸ்) மூலம் வெளியான சமீபத்திய அறிக்கையும், சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட்போனின் பின்புற எதிர்கொள்ளும் இரட்டை கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளதால், எஸ் 9-ல் டூயல் கேம் அமைப்பு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதென்றே கூறலாம்.

எஸ்8 மற்றும் எஸ்8+ போலல்லாமல்

எஸ்8 மற்றும் எஸ்8+ போலல்லாமல்

சமீபத்தில் வெளியானதொரு மற்றொரு அறிக்கை இந்த ஆண்டு வெளியான எஸ்8 மற்றும் எஸ்8+ போலல்லாமல், கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ கருவிகள், அதன் பின்புறம்-ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் கொண்டு வராமல், முன்பக்கம் கொண்டு வரும் என்று அறிவித்துள்ளது.

முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும்

முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும்

கேலக்ஸி கிளப்பில் இருந்து வரும் அறிக்கையின் கீழ் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆனது முன்பக்கம் எதிர்கொள்ளும் கைரேகை சென்சார் வரும் என்று கூறுகிறது. கேலக்ஸி எஸ்8 உடன் ஒப்பிடும்போது இதுவொரு முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும்.

முன்பக்க ஏற்றப்பட்ட கைரேகை சென்சார்

முன்பக்க ஏற்றப்பட்ட கைரேகை சென்சார்

வெளியான அறிக்கையை தவிர, தென்கொரிய நிறுவனத்தால் கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒரு காப்புரிமையானதும் வருகிற அடுத்த தலைமுறை கேலக்ஸி எஸ் தொடர் ஸ்மார்ட்போன்களில் முன்பக்க ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் கொண்டு வரலாம் என்பதை வெளிப்படுத்துகிறது.

கைரேகை ஸ்கேனரில் மாற்றம்

கைரேகை ஸ்கேனரில் மாற்றம்

இணையத்தில் பரவிக் கொண்டிருக்கும் பல தகவல்களின் அடிப்படையில், கேலக்ஸி எஸ்8 தொடரின் கைரேகை சென்சார் வசதியுடன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதுவே எஸ்9 தொடரில் கைரேகை ஸ்கேனரில் மாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கலாம்.

முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும்.

முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 தொடர் கருவிகளில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவிகள் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். அது உண்மையாகினில் இந்த சிப்செட் கொண்டு இயங்கும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 845, எக்ஸிநோஸ் 9 ஆக்டா

ஸ்னாப்டிராகன் 845, எக்ஸிநோஸ் 9 ஆக்டா

6ஜிபி கொண்ட எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் மொத்தம் இரண்டு வகைகள் வெளியாகலாம் அதாவது ஒன்று ஸ்னாப்டிராகன் 845 கொண்டும் மற்றொன்று எக்ஸிநோஸ் 9 ஆக்டா மூலம் இயங்கலாம். இருப்பினும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விவரமும் சாம்சங் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தை

தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தை

மேலும் இக்கருவிகள் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன், இரண்டு சேமிப்பு வகைகளில்பே வெளியாகலாம் என்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 256 ஜிபி மாறுபாடானது, தென் கொரியா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தைகளை மட்டுமே தாக்கக்கூடும் மற்றும் இந்தியாவுக்கு வராது.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018

எஸ்9 மற்றும் எஸ்9 + ஆகிய இரண்டுமே - செயல்திறன், கேமரா மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் அடிப்படையில் எஸ்8 தொடர் போன்களைவிட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் கசிந்த ஒரு அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆனது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அறிமுகப்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 Leaked in Images, Dual Rear Cameras Tipped. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X