விரைவில் : மிரட்டலான கேலக்ஸி எஸ்9 & கேலக்ஸி எஸ்9 பிளஸ் அறிமுகம்.!
மிகவும் எதிர்பார்த்த ஐரிஸ் ஸ்கேனர் அமைப்புடன் இந்த கேலக்ஸி சாதனங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இவற்றில் எஸ்எல்பி சர்க்யூட் பலகைகள் இடம்பெற்றுள்ளது.
கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் இணையத்தில் கசிந்துள்ளது, மேலும் பல்வேறு சாம்சங் நிறவனம் தற்சமயம் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் இந்த கேலக்ஸி சாதனங்களில் இருக்கும் கேமரா வசதி அனைவரையும் கவரும்படி அமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்த்த ஐரிஸ் ஸ்கேனர் அமைப்புடன் இந்த கேலக்ஸி சாதனங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இவற்றில்எஸ்எல்பி சர்க்யூட் பலகைகள் இடம்பெற்றுள்ளது என சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெறும் எனத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.

2018 ஜனவரி:
கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

90-சதவீதம்:
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 90-சதவீதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

கைரேகை சென்சார்:
இந்த கேலக்ஸி எஸ்9பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கைரேகை சென்சார், பிக்ஸ்பை, ஐரிஸ் ஸ்கேனர், பெசல்லெஸ் போன்ற
அட்டகாசமான சிறப்பம்சங்கள் இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சென்சார்கள்:
கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா மற்றும் சென்சார்கள், இயர்போன் ஜாக், செல்பீ கேமரா போன்றவை இடம்பெறுவதால் சிறய அளவு பெசல்கள் வைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

நினைவகம்:
கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 பிளஸ் 6ஜிபி ரேம் மற்றும் கேலக்ஸி எஸ்9 4ஜிபி ரேம் கொண்டு
வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845:
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications