கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ்: வெளியீட்டு தேதி, புகைப்படங்கள் வெளியாகின.!
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் பிப்ரவரி 25-ல் நடைபெறும் பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இன்பினிட்டி டிஸ்பிளே மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு வெளிவரும்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களின் புகைப்படங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதியும், மேலும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பும் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி+ 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கேலக்ஸி எஸ்9
ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி வைட்-ஆங்கில் கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கூட இரண்டு கருவிகளுமே எப்/1.5 முதல்எப்/2.4 வரையிலான துளையுடனேயே வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எஸ்9 ப்ளஸ்
ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு:
இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் எக்ஸிநோஸ் 9810 எஸ்ஒசி கொண்டும் சில சந்தைகளில் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி கொண்டும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவரும்.

சேமிப்பு:
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு எஸ்9 ப்ளஸ்
ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் மற்றும் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்படும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..


Click it and Unblock the Notifications








