Home
Mobile

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ்: பேட்டரி விவரங்கள் வெளியானது.!

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash

சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் பிப்ரவரி 25-ல் நடைபெறும் பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்;த இரண்டு ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியின் விவரங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ்: பேட்டரி விவரங்கள் வெளியானது.!

ரோலண்ட் குவாண்ட் ட்வீட் படி புதிய கேலக்ஸி எஸ்9 சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி+ 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி வைட்-ஆங்கில் கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கூட இரண்டு கருவிகளுமே எப்/1.5 முதல்எப்/2.4 வரையிலான துளையுடனேயே வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஃபினிட்டி :

இன்ஃபினிட்டி :

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன்களின் விளிம்பில் பல வேறுபாடுகள் காணப்படுகிறது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் எக்ஸிநோஸ் 9810 எஸ்ஒசி கொண்டும் சில சந்தைகளில் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி கொண்டும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 Galaxy S9plus battery capacities leak online; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X