ஐபோனை தூக்கி சாப்பிடும் அம்சங்களுடன் ரூ.56,500/-க்கு கேலக்ஸி எஸ்9.!

|

பிரபல டிப்ஸ்டர் ஆன இவான் பிளஸ் வரவிருக்கும் சாம்சங் நிறுவனத்தின் உயர் இறுதியில் தொலைபேசிகள் பற்றி கிட்டத்தட்ட எல்லா வகையான விவரங்களையும் கொடுத்தபிறகும் கூட சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளியாவது நின்றபாடில்லை.

ஐபோனை தூக்கி சாப்பிடும் அம்சங்களுடன் ரூ.56,500/-க்கு கேலக்ஸி எஸ்9.!

தற்போது டிபிராண்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ள புகைப்படமானது சாம்சங் கேலக்ஸி எஸ்9 தொடர் ஸ்மார்ட்போனின் நேர்த்தியான வடிவமைப்பை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, ஆப்பிள் ஐபோன்களுக்கு கடுமையான போட்டியைஉண்டாகும் ஒரு புதிய சென்சார்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஐபோனை தூக்கி சாப்பிடும் அம்சங்களுடன் ரூ.56,500/-க்கு கேலக்ஸி எஸ்9.!

அதென்ன அம்சம்.? மாற்றும் கூறப்படும் சென்சார்கள் என்னென்ன என்பதை விரிவாக காண்போம்.

இருண்ட மற்றும் கடுமையான ஒளி நிலை

இருண்ட மற்றும் கடுமையான ஒளி நிலை

வெளியாகியுள்ள புகைப்படம் வழியாக கேலக்ஸி எஸ்9 தொடரில் பயோமெட்ரிக் தொழில்நுட்பம் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இந்த தொழில்நுட்பமானது நுண்ணறிவு ஸ்கேன் ( Intelligent Scan) என்று அழைக்கப்படுகிறது மற்றும் அது இருண்ட மற்றும் கடுமையான ஒளி நிலைகளில் கூட முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேனிங் ஆகிய இரண்டையுமே பயன்படுத்தும் ஒரு பயோமெட்ரிக் அம்சமாக இருக்குமென்று கூறப்படுகிறது.

நுண்ணறிவு ஸ்கேன்

நுண்ணறிவு ஸ்கேன்

கூறப்படும் நுண்ணறிவு ஸ்கேன் ஆனது கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ கருவிகளின் முன்பக்க கேமராவையே அதன் ஐரிஸ் ஸ்கேனராக பயன்படுத்தும். இது சவாலான ஒளி சூழல்களில் கூட ஒரு பயனரின் முகத்தை கண்டறிய உதவுகின்றன. இதுதவிர இந்த நுண்ணறிவு ஸ்கேன் பற்றிய இதர விவரங்கள் ஏதும் அறியப்படவில்லை.

பேஸ் ஐடி அம்சத்திற்கு கடும் போட்டி

பேஸ் ஐடி அம்சத்திற்கு கடும் போட்டி

ஆனால், இந்த தொழில்நுட்பமானது கிடைக்கக்கூடிய ஒளியினைப் பொறுத்து முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேனிங்கிற்கும் இடையே மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆக கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ பயனர்கள் கைரேகை மற்றும் முக / ஐரிஸ் ஸ்கேனர் ஆகியவற்றை ஒரு போனில் அனுபவிக்கலாம். மறுகையில் இந்த இரண்டு அம்சங்களும் ஒரே கருவியில் இடம்பெற்றிருப்பது சாம்சங் நிறுவனத்திற்கு சவாலையும், ஆப்பிள் நிறுவனத்தின் பேஸ் ஐடி அம்சத்திற்கு கடும் போட்டியையும் வழங்குமென்பதில் சந்தேகமேயில்லை.

பெஸல்லெஸ் வடிவமைப்பு

பெஸல்லெஸ் வடிவமைப்பு

வடிவமைப்பை பொறுத்தமட்டில் கூறப்படும் கேலக்ஸி எஸ்9 வரிசை ஸ்மார்ட்போன்கள் ஆனது கேலக்ஸி எஸ்8 கொண்டுள்ள அதே கண்ணாடி மற்றும் உலோக வடிவமைப்பு வர எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முன்பக்கம் இன்னும் குறைவான பெஸல்லெஸ் டிஸ்பிளே கொண்டிருக்கலாம். உடன் இரு கருவிகளுமே க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் (அமெரிக்க பதிப்பு) மற்றும் எக்ஸினோஸ் 9810 கொண்டு (இந்தியா உடபடஉலகளாவிய சந்தை பதிப்பு) இயங்கலாம்.

வடிவமைப்பு மாற்றம்

வடிவமைப்பு மாற்றம்

கேலக்ஸி எஸ்9 ஆனது ஒரு 5.8 அங்குல க்யூஎச்டி+ டிஸ்பிளே கொண்டிருக்க, மறுகையில் உள்ள எஸ்9+ ஆனது ஒரு 6.2 அங்குல க்யூஎச்டி+ டிஸ்பிளே கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு டிஸ்பிளேக்களுமே 18: 5: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தில் வெளிவரலாம். பிரதான வடிவமைப்பு மாற்றம் எதுவென்று பார்த்தால் எஸ்9 தொடரின் கைரேகை ஸ்கேனர் தான். சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) சாதனங்களில் இருப்பது போன்று கேமரா தொகுதிக்கு கீழே ஸ்கேனர் இடம்பெறலாம்.

டூயல் பிக்சல் 12 மெகாபிக்சல்

டூயல் பிக்சல் 12 மெகாபிக்சல்

கேலக்ஸி எஸ்9 ஆனது அதன் பின்புறத்தில் ஒற்றை கேமரா சென்சார் கொண்டு வரும். இருப்பினும் அது டூயல் பிக்சல் 12 மெகாபிக்சல் படங்களை பதிவு செய்யும் வண்ணம் அதன் ஓஐஎஸ் (OIS) உதவும். இந்த சென்சார் ஆனது எப்/ 1.5 மற்றும் எப் / 2.4-க்கு இடையில் குறைந்த ஒளியில் புகைப்படங்களை எடுக்க உதவும். சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் டபுள்யூ2018 ஃபிளிப் போனில் இதே போன்ற அமைப்பு காணப்படுகிறது.

ஸ்லா-மோஷன் முறை

ஸ்லா-மோஷன் முறை

மேலும் கேலக்ஸி எஸ்9 ஆனது சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் போன்ற தொலைபேசிகளில் இருக்கும் சூப்பர் ஸ்லா-மோஷன் முறையையும் இதன் கேமராவில் சேர்க்குமென்று கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போனும் அதே 12எம்பி முதன்மை சென்சாரை கொண்டிருக்குமென கூறப்படுகிறது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில் ஐபோன் எக்ஸ்-ல் உள்ள அனிமஜி அம்சம் போன்றதொரு அனிமேட்டட் அவதாரங்களை வழங்கும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் இரு கருவிகளும் வெளியாகலாம்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

எஸ்9 ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு வெளியாக, மறுகையில் உள்ள பெரிய மாறுபாடான எஸ்9+ ஆனது 3500எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், கேலக்ஸி எஸ்9 ஆனது தோராயமாக ரூ.56,500/- என்றும் கேலக்ஸி எஸ்9+ ஆனது தோராயமாக ரூ.58,868/- என்றும் தென்கொரியாவில் விற்பனைக்கு வரலாம். இரு கருவிகளுமே மார்ச் 2-ஆம் தேதி முதல் முன்பதிவுகளை தொடங்கி மார்ச் 26 முதல் தென்கொரியாவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவிலும் எஸ்9 தொடர் தரையிறங்கலாம் என்றும் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9, Galaxy S9+ renders show off familiar design, new sensors. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X