கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் பற்றி வெளியாகியுள்ள புதிய தகவல்.!

|

சாம்சங் நிறுவனத்திடமிருந்து வரவிருக்கும் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆகிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் தொடர்பான செய்திகள் கடினமாகவும் மற்றும் வேகமாகவும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் பற்றி வெளியாகியுள்ள புதிய தகவல்.!

அப்படியாக இந்த வாரம், தென் கொரிய நிறுவனமான சாம்சங் வருகிற ஜனவரி மாதம் முதல் அதன் புதிய சாதனங்களை உற்பத்தி செய்ய தொடங்குவதாக தகவல்கள் வெளியானது. இப்போது கூறப்படும் (கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ்) இரண்டு ஸ்மார்ட்போன்களுமே எப்சிசி (FCC) தளத்தின் சான்றிதழை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதம் நிகழும் சிஇஎஸ் நிகழ்வில்

ஜனவரி மாதம் நிகழும் சிஇஎஸ் நிகழ்வில்

கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆகியவைகள் எச்சிசி ஒப்புதலுக்காக முறையே மாடல் எண்கள் எஸ்எம்-ஜி960எப் மற்றும் எஸ்எம்-ஜி9605எப் என்று அனுப்பப்பட்டுள்ளன. இந்த தகவலின் மூலம் இக்கருவிகள் வருகிற ஜனவரி மாதம் நிகழும் சிஇஎஸ் நிகழ்வில் வெளியாக வாய்ப்புள்ளது.

குறுகிய பெசல்களுடனான இன்பினிட்டி டிஸ்பிளே

குறுகிய பெசல்களுடனான இன்பினிட்டி டிஸ்பிளே

உற்பத்தியாளரின் இறுதி தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஆகியவைகளை சமர்ப்பித்த பின்னர் எப்சிசி சான்றிதழ் அளிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஆகிய கருவிகளுடன் ஒப்பிடும்போது இக்கருவிகள் குறுகிய பெசல்களுடனான இன்பினிட்டி டிஸ்பிளே கொண்டுவெளிவரலாம்.

கைரேகை சென்சார் எங்கு பொதிக்கப்படும் .?

கைரேகை சென்சார் எங்கு பொதிக்கப்படும் .?

டிஸ்பிளே அம்சம் மிகவும் சிறப்பானதாக இருக்க அதிக வாய்ப்புள்ள மறுகையில் இதன் பின்புற கைரேகை சென்சார் எங்கு பொதிக்கப்படும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை. வெளியானதொரு லீக்ஸ் புகைப்படத்தின்படி, கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ கருவிகளில் உள்ள கேமராவின் அருகாமையில் கைரேகை சென்சார் இடம்பெறும்.

டூயல் பின்புற கேமரா

டூயல் பின்புற கேமரா

மேலும், வரவிருக்கும் இந்த சாம்சங் பிளாக்ஷிப் கருவிகளில் 3.5மிமீ ஹெட்ஜாக் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்9+ ஆனது டூயல் பின்புற கேமரா அமைப்பை கொண்டுவருமென எதிர்பார்க்கப்படும் மறுகையில் எஸ்9 ஆனது ஒற்றை ரியர் கேமராவை கொண்டு வெளியாகலாம்.

பெரிய அளவிலான பேட்டரி

பெரிய அளவிலான பேட்டரி

மேலும் கூறப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ கருவிகளில் புதிய எஸ்எல்பி மதர்போர்ட் பயன்படுத்தபடலாம். இது ஐபோன் எக்ஸ் போன்ற பெரிய அளவிலான பேட்டரிகளை சாதனங்களில் பொருத்த உதவும்.

18: 5: 9 என்கிற திரை விகிதம்.

18: 5: 9 என்கிற திரை விகிதம்.

கடந்த வதந்திகளின் படி, கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆகியவை முறையே 5.8 அங்குல மற்றும் 6.2 அங்குல டிஸ்பிளே கொண்டு வெளியாகும். இவை இரண்டுமே இன்பினிட்டி டிஸ்பிளே 18: 5: 9 என்கிற திரை விகிதத்தை கொண்டிருக்கும்.

6 ஜிபி ரேம்

6 ஜிபி ரேம்

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஸ்னாப்டிராகன் 845 செயலிகளால் இயக்கப்படலாம். சிறிய பிளாக்ஷிப் ஆனது 4 ஜிபி ரேம் கொண்டிருக்க, மறுகையில் உள்ள பெரிய தொலைபேசியானது 6 ஜிபி ரேம் கொண்டிருக்கலாம்.

கேலக்ஸி எஸ்9 தொடர்

கேலக்ஸி எஸ்9 தொடர்

கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆகிய இரண்டுமே ஆண்ட்ராய்டு ஓரியோ (பெட்டிக்கு வெளியே) கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேலக்ஸி எஸ்9 தொடரானது வருகிற ஜனவரி மாதம் சிஇஎஸ் (CES) நிகழ்வில் வெளியிடப்பட்டால் மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9, Galaxy S9+ pass FCC certification, expected to launch at CES 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X