Home
Mobile

கண்கவரும் வண்ணங்களுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 சீரிஸ்.!

இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் எக்ஸிநோஸ் 9810 எஸ்ஒசி கொண்டும் சில சந்தைகளில் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி கொண்டும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்த்த கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் பிப்ரவரி 25-ல் நடைபெறும் பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிபார்ப்புகளை உருவாக்கியுள்ளது. Evan Blass-என்பவர் குறிப்பிட்டுள்ள தகவலின் அடிப்படையில் லீலாக் ஊதா நிற மாறுபாடுகளுடன் இந்த கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும்.

முந்தைய தகவலின் அடிப்படையில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே மற்றும் கோரல் ப்ளூ போன்ற நிறங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி+ 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி வைட்-ஆங்கில் கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கூட இரண்டு கருவிகளுமே எப்/1.5 முதல்எப்/2.4 வரையிலான துளையுடனேயே வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஃபினிட்டி :

இன்ஃபினிட்டி :

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன்களின் விளிம்பில் பல வேறுபாடுகள் காணப்படுகிறது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் எக்ஸிநோஸ் 9810 எஸ்ஒசி கொண்டும் சில சந்தைகளில் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி கொண்டும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவரும்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
 சேமிப்பு:

சேமிப்பு:

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 and Galaxy S9 plus leaked render shows Lilac Purple color variant ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X