கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ்: வெளியீட்டு தேதி, அம்சங்கள் வெளியாகின.!

இந்த தகவலை பிரபல லீக்ஸ்டர் ஆன இவான் பிளாஸ் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் வரப்போகும் கேலக்ஸி எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்களின் முழு அம்சங்களையும் இவர் வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

|

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை முதன்மை ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9ப்ளஸ் ஆகிய கருவிகள் வருகிற பிப்ரவரி 26-ஆம் தேதியன்று வெளியாகப்போவதாக வதந்திகள் பரவி வருகின்றன.

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ்: வெளியீட்டு தேதி, அம்சங்கள் வெளியாகின!

இந்த சாதனங்கள் எம்டபுள்யூசி 2018 நிகழ்ச்சியில் தரையிறக்கம் செய்யப்பட்டு மார்ச் 1-அமம் தேதிக்கு முன்கூட்டியே அதன் முன்பதிவுகளை தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மார்ச் 16, 2018 முதல் அதன் விற்பனையை தொடங்கும். இந்த தகவலை பிரபல லீக்ஸ்டர் ஆன இவான் பிளாஸ் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் வரப்போகும் கேலக்ஸி எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்களின் முழு அம்சங்களையும் இவர் வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல புதுப்பித்தல் மேம்பாடு

பல புதுப்பித்தல் மேம்பாடு

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களுமே கடந்த சில நாட்களாக பலமுறை லீக்ஸ் செய்திகளில் சிக்கியவண்ணம் உள்ளது. அவைகளில் இருந்து எஸ்9 மற்றும் எஸ்9+ கருவிகள் முந்தைய கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ உடன் ஒப்பிடும்போது பல புதுப்பித்தல் மேம்பாடுகளை பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

 6.2 அங்குல க்யூஎச்டி+ டிஸ்பிளே

6.2 அங்குல க்யூஎச்டி+ டிஸ்பிளே

அம்சங்களை பொறுத்தமட்டில், கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் முறையே 5.8 அங்குல க்யூஎச்டி+ மற்றும் மற்றும் 6.2 அங்குல க்யூஎச்டி+ டிஸ்பிளேக்களை கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இரண்டு சாதனங்களுமே இந்தியாவின் சில சந்தைகளில் எக்ஸிநோஸ் 9810 எஸ்ஓசி கொண்டும் மற்றும் சில சந்தைகளில் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டும் வெளியாகலாம்.

4ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி

4ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி

இருப்பினும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இன்னமும் 4ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு என்கிற அம்சத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான கேலக்ஸி எஸ்9-ன் ரீடெயில் பாக்ஸ் புகைப்படத்தின்படி, இரண்டு கேலக்ஸி கருவிகளுக்கும் 12எம்பி அளவிலான வேரியபில் அபெர்ஷர் கேமராவை பரிந்துரைக்கிறது. உடன் எஸ்9 சாதனத்தில் ஒரு ஒற்றை பின்புற கேமராவை வெளிப்படுத்துகிறது. மறுகையில் உள்ள எஸ்9+ ஆனது ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமரா துறையில் நல்ல மாற்றங்கள் இருப்பினும் கூட இரண்டு கருவிகளுமே எப்/ 1.5 முதல்எப்/ 2.4 வரையிலான துளையுடனேயே வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தை பொருத்தமட்டிலும் இரண்டு தொலைபேசிகளுமே ஒரு 8எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கலாம். இது தவிர, இறுதியாக சாம்சங் நிறுவனம் அதன் ஒற்றை மோனோ ஸ்பீக்கர் அமைப்பிலிருந்து ஸ்டீரியோ ஸ்பீக்கர் அம்சத்திற்கு இம்முறை மாறலாம்.

ஸ்னாப்டிராகன் 845.

ஸ்னாப்டிராகன் 845.

இருப்பினும் கூட, இக்கருவிகள் அதே 3000எம்ஏஎச் மற்றும் 3500எம்ஏஎச் பேட்டரிகள் கொண்டே வெளியாகலாம். மேலும், வதந்திகள் உண்மையானால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கலாம். உடன் மேம்படுத்தல் மிக்க ஸ்னாப்டிராகன் 845 கொண்டிருக்கலாம், இது சிறந்த பேட்டரி ஆயுளை வழங்கலாம். மேலும் இக்கருவி ஐபி68 நீர் மற்றும் தூசி மதிப்பீடு, வயர்லெஸ் சார்ஜ் போன்ற இதர அம்சங்களையும் கொண்டுருக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 and Galaxy S9+ to Launch On February 26, But Will Be Up for Sale from March 16: Report. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X