விரைவில் : புதிய கேலக்ஸி எஸ்9 & கேலக்ஸி எஸ்9 பிளஸ் அறிமுகம்.!
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 டிஸ்பிளே அல்லது 6.2-இன்ச் சூப்பர் அமோல்ட் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் அதன் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும்ஜனவரி மாதம் லாஸ் வேகாஸில் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் மற்றும் புதிய நவீன தொழில்நுட்பத்துடன் வெளிவரும் என சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 90-சதவீதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 டிஸ்பிளே அல்லது 6.2-இன்ச் சூப்பர் அமோல்ட் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் சென்சார்கள், இயர்போன் ஜாக், செல்பீ கேமரா போன்றவை இடம்பெறுவதால் சிறய அளவு பெசல்கள் வைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications