Samsung Galaxy S9 மற்றும் S9 Plus ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் முதல் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறத் தொடங்கியுள்ளது. ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10அப்டேட் கிடைத்த வண்ணம் உள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2960*1440 பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி
கேலக்ஸி எஸ்9 சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில்3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

கேமரா ஆப்
கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா ஆப் பயன்பாடானது அதன் பல்வேறு முறைகள் விரைவான அணுகலுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, ஐபோனின் கேமரா பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து, அவற்றுக்கிடையே ஸ்வைப் செய்வதன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்9 பிளஸ்
கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி+ 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள டூயல் கேமரா வசதி வைட்-ஆங்கில் கேமராவை விட துள்ளியமாக வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுக்கும் திறமைக் கொண்டுள்ளது. "லைவ் ஃபோகஸ்" மற்றும் இந்தஸ்மார்ட்போனில் உள்ள முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சங்கள்இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்9
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி வைட்-ஆங்கில் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதது. இவற்றில் உள்ள ஆட்டோஃபோகஸ்தொழில்நுட்பம் வேகமாகவும் மற்றும் அதிக நம்பகமான செயல்திறன் கொண்டவை என்பது குறிப்பித்தக்கது.


Click it and Unblock the Notifications








