ஒருவழியாக கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.!

|

இறுதியாக சாம்சங் நிறுவனம் அதன் வழக்கமான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு மீது, அதிக அளவிலான கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. உங்கள் கணிப்பு சரியெனில், இந்த தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமானது வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதியன்று நிகழும் எம்டபிள்யூசி 2018 நிகழ்வில் அதன் எஸ்9 வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதற்கான அழைப்பு விடுத்துள்ளது.

ஒருவழியாக கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.!

வெளியான அழைப்பிதழில் தெளிவாக எஸ்9 ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சம் பற்றுய விவரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியாகிப்போவது எஸ்9 வரிசை தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அழைப்பிதழில் '9' என்கிற எண்ணும் இடம்பெற்றுள்ளது. ஆக இந்த நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 + ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவது உறுதியாகிவிட்டது.

அடுத்த தலைமுறை

அடுத்த தலைமுறை

அதே பிப்ரவரி 25-ல் தான் நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது அதன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களை தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சாம்சங்-நோக்கியா இடையே ஒரு பெரிய மோதல் ஏற்படவுள்ளது.

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ்

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ்

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆகிய இரண்டின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்துள்ளன. மேலும் அவைகள் சாம்சங் எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் ஆனது பல வகையில் பல அம்சங்களுடன் வேறுபடுத்துவதையும் வெளிப்படுத்துகினற்ன.

பெஸல்லெஸ் வடிவமைப்பு

பெஸல்லெஸ் வடிவமைப்பு

கூறப்படும் கேலக்ஸி எஸ்9 வரிசை ஸ்மார்ட்போன்கள் ஆனது கேலக்ஸி எஸ்8 கொண்டுள்ள அதே கண்ணாடி மற்றும் உலோக வடிவமைப்பு வர எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முன்பக்கம் இன்னும் குறைவான பெஸல்லெஸ் டிஸ்பிளே கொண்டிருக்கலாம்.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips
டிஸ்பிளே

டிஸ்பிளே

அதாவது கேலக்ஸி எஸ்9 ஆனது ஒரு 5.8 அங்குல க்யூஎச்டி+ டிஸ்பிளே கொண்டிருக்க, மறுகையில் உள்ள எஸ்9+ ஆனது ஒரு 6.2 அங்குல க்யூஎச்டி+ டிஸ்பிளே கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு டிஸ்பிளேக்களுமே 18: 5: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தில் வெளிவரலாம்

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

பிரதான வடிவமைப்பு மாற்றம் எதுவென்று பார்த்தால் எஸ்9 தொடரின் கைரேகை ஸ்கேனர் தான். சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) சாதனங்களில் இருப்பது போன்று கேமரா தொகுதிக்கு கீழே ஸ்கேனர் இடம்பெறலாம். இது கேலக்ஸி எஸ்8 பயனர்களிடமிருந்து மிகவும் கோரப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும்.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

கேலக்ஸி எஸ்9 மீண்டும் ஒரு ஒற்றை கேமரா சென்சார் கொண்டு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள எஸ்9+ ஆனது இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வரும். இது எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போனிற்கு இடையேயான முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும்.

வேரியபில் அப்பெர்ஷர்

வேரியபில் அப்பெர்ஷர்

மேலும், சிறந்த கேமரா செயல்திறனுக்காக சாம்சங் அதன் வேரியபில் அப்பெர்ஷர்களை இந்த இரண்டு தொலைபேசிகளிலும் பயன்படுத்துகிறது. ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ கொண்டு இயங்கும் இக்கருவிகள் அதன் முன்னோடிகள் கொண்டிருந்த அதே பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி

பேட்டரி

அதாவது எஸ்9 ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு வெளியாக, மறுகையில் உள்ள பெரிய மாறுபாடான எஸ்9+ அனைத்து 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கலாம் அறிமுக நிகழ்வுக்குப் பிறகு இந்த இரு தொலைபேசிகளுக்குமே அதன் முன்பதிவுகளை தொடங்கி, வருகிற மார்ச் 15 முதல் விற்பனையை தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Will Officially Launch the Galaxy S9 Duo on February 25 at the MWC 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X