ஆண்ட்ராய்டு ஓரியோ, ஸ்னாப்டிராகன் 845 உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்9.!
அதனை தொடர்ந்து மிக விரைவில் இந்தியாவில் சாம்சங் நிறுவனம் அதன் அடுத்தடுத்த சாதனங்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சாம்சங் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. ஒருவேளை கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கடந்து வந்த கடினமான நேரத்தை மனதிற்கொண்டு நிறுவனம் இதையெல்லாம் நிகழ்த்துகிறது என்றே வைத்துக்கொள்ளலாம்.

தென் கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங் சமீபத்தில் பிரபலமற்றஅதன் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனின் அடுத்த மாறுபாடான சாம்சங் கேலக்ஸி நோட் 8 சாதனத்தை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து மிக விரைவில் இந்தியாவில் சாம்சங் நிறுவனம் அதன் அடுத்தடுத்த சாதனங்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கேலக்ஸி எஸ்9
அதாவது, இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனின் அடுத்த பதிப்பான கேலக்ஸி எஸ்9 என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் சார்ந்த உற்பத்தி பணிகளில் நிறுவனம் ஈடுப்பட தொடங்கியுள்ளதென்று வெளியான தகவல்கள் அறிவிக்கின்றன.

ஸ்னாப்டிராகன் 845 செயலி
கேலக்ஸி எஸ்9 சார்ந்த வதந்திகளின் வழியே, வரவிருக்கும் சாம்சங் நிறுவனத்தின் முதன்மை தொலைபேசியான இது ஸ்னாப்டிராகன் 845 செயலி கொண்டிருக்கும் மற்றும் ஆண்ட்ராய்டு 8 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குமென அறியப்படுகிறது.

ஆண்ட்ராய்டு ஓரியோ
மேலும் இக்கருவியின் வெளியீட்டிற்கு பின்னர் சாம்சங் எஸ்9 பிளஸ் கூட வெளிவருமென அறிக்கை கூறுகிறது. 2018-ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலப்பகுதியில், முதன்மை சாதனங்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ இடம்பெறும் என்பதால் எஸ்9 ஸ்மார்ட்போனிலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இக்கருவி சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் யூஐ-ன் புதிய பதிப்பான 9.0 கொண்டுவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்ட்ராகன் 854 கொண்டு இயங்கலாம்
மேலும் வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆனது க்வால்காம்-ன் வரவிருக்கும் செயலியான ஸ்னாப்ட்ராகன் 854 கொண்டு இயங்கலாம். அது உண்மையானால், சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ தான் புதிய சிப்செட்டை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன்களாய் இருக்கும்.

முன்னோடிகளைப் போலவே இருக்கும்
மென்பொருள் மற்றும் செயலி தவிர, வரவிருக்கும் எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, குறைந்தபட்ச அம்சங்களையே கொண்டிருக்கும் இருக்கும். இருப்பினும் வதந்திகளின்படி, இந்த சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும்ஸ்மார்ட்போன்கள் அதன் முன்னோடிகளைப் போலவே இருக்கும்.

இன்பினிட்டி டிஸ்ப்ளே
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இன்பினிட்டி டிஸ்ப்ளே, பிக்ஸ்பை பொத்தான், காட்சிக்கு கீழே உள்ள முன் பேனலில் வெட்டப்பட்ட செவ்வக கைரேகை சென்சார் கொண்டிருக்கலாம். கேலக்ஸி எஸ்9 ஆனது 64 ஜிபி உள் சேமிப்புடன் 4ஜிபி ரேம் உடன் வருவதாகவும், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கப்படும் ஆதரவு உண்டு என்றும் வதந்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications