சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுக்கு அதரிடி விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த விலைகுறைப்பு சலுகை பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின்
பல்வேறு விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எஸ்9பிளஸ்மாடலுக்கும் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி
கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதல் சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எஸ்9 டிஸ்பிளே
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2960*1440 பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எஸ்9 பேட்டரி
கேலக்ஸி எஸ்9 சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

கேமரா ஆப்
கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா ஆப் பயன்பாடானது அதன் பல்வேறு முறைகள் விரைவான அணுகலுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, ஐபோனின் கேமரா பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து, அவற்றுக்கிடையே ஸ்வைப் செய்வதன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்9 பிளஸ்
கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி+ 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள டூயல் கேமரா வசதி வைட்-ஆங்கில் கேமராவை விட துள்ளியமாக வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுக்கும் திறமைக் கொண்டுள்ளது. "லைவ் ஃபோகஸ்" மற்றும் இந்தஸ்மார்ட்போனில் உள்ள முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்9
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி வைட்-ஆங்கில் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதது. இவற்றில் உள்ள ஆட்டோஃபோகஸ் தொழில்நுட்பம் வேகமாகவும் மற்றும் அதிக நம்பகமான செயல்திறன் கொண்டவை என்பது குறிப்பித்தக்கது.


Click it and Unblock the Notifications