சூப்பர் ஐடியா, எட்ஜ் கருவிகளுக்கு பதிலாக கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்.!?

புதிதாக வெளியாகியுள்ள லீக்ஸ் தகவலானது சாம்சங் விரும்பிகளுக்கு கை நிறைய கரும்புகளை (அம்சங்கள்) அள்ளி கொடுத்தது போல் தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.!

|

சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியின் வெளியீட்டு தேதி மிக நெருங்கிவிட்டது என்பதை லீக்ஸ் தகவலொன்று வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியானது (அறிக்கைகளின் படி) நியூயார்க் நகரில் வரும் மார்ச் மாதம் 29-ஆம் தேதியன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இப்போதைக்கு, முந்தைய கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் போலல்லாமல் சாம்சங் நிறுவனமானது கேலக்ஸி எஸ்8 கருவியை மட்டும் பார்சிலோனாவில் நிகழும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் தொடங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தருணத்தில் புதிதாக வெளியாகியுள்ள லீக்ஸ் தகவலானது சாம்சங் விரும்பிகளுக்கு கை நிறைய கரும்புகளை அள்ளி கொடுத்தது போல் தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.!

கேலக்ஸி எஸ்8 + லோகோ

கேலக்ஸி எஸ்8 + லோகோ

அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்8 + லோகோ கொண்ட கருவி சார்ந்த குறிப்புகளைக் 'டிப்ஸ்டர்' இவான் ப்ளாஸ் மூலம் வெளியிடப்பட்ட பிறகு, வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியானது இரண்டு பதிப்புகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

வரவிருக்கும் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே பற்றிய ட்வீட் ஒன்றை இவான் ப்ளாஸ் வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட் படி, கேலக்ஸி எஸ்8 கருவியின் அடிப்படை மாறுபாடானது 5.8 அங்குலத்தில் இருந்து தொடங்கும் என்றும் பெரிய மாறுபாடு அதாவது கேலக்ஸி எஸ்8 + அக்கருவி ஒரு 6.2 அங்குல டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் அமோஎல்இடி

சூப்பர் அமோஎல்இடி

இந்த இரண்டு கருவிகளும் சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டு கொண்டு வெளியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவர் கூறியுள்ளார் மற்றும் நிறுவனம் சிறுது காலம் அதன் தலைமை ஸ்மார்ட்போன்களுக்கு இதை பயன்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

ஹோம் பட்டன் இருக்காது

ஹோம் பட்டன் இருக்காது

மற்றொரு கசிவு செய்தியானது (விபோ) வெளியாப்போகும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியில் ஹோம் பட்டன் இருக்காது என்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மெல்லிய பெஸல்கள்

மெல்லிய பெஸல்கள்

அதை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனவரி மாதம் சாம்சங் வெளியிட்ட அதன் காட்சி பிரிவு விளம்பர வீடியோக்களில் கருவியின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் மெல்லிய பெஸல்கள் இருப்பதும் ஹாம் பட்டன் இல்லாததும் காட்சிப்படுத்தப்பட்டது.

வாய்ஸ் அசிஸ்டன்ட்

வாய்ஸ் அசிஸ்டன்ட்

இதுவரை கான்செப்ட் மற்றும் முதல் தோற்றம் மட்டுமே வெளியாகியுள்ளது. வெளியாகப்போகும் புதிய போன்கள் நிஜமாகவே வீடியோவில் வெளியிடப்பட்டது போல் இருக்குமா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஹாம் பட்டனுக்கு பதிலாக நிறுவனத்தின் புதிய வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆன 'பிக்ஸ்பை' அம்சத்திற்கு ஒரு பிரத்யேக பொத்தான் கருவியில் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி

பேட்டரி

சுவாரஸ்யமாக, கருவியின் டிஸ்ப்ளே அளவு பெரியதாக மாறுகிறது என்பதற்கு சாதகமாக சாம்சங் பேட்டரி அளவில் கணிசமாக அதிகரிப்பு நிகழும். அதவது 6.2 அங்குல பதிப்பில் ஒரு 3500எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி எதிர்பார்க்கலாம்.

கேலக்ஸி எஸ்7, எட்ஜ்

கேலக்ஸி எஸ்7, எட்ஜ்

5.1 அங்குல சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவி ஒரு 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொண்டிருந்ததும், 5.1 அங்குல கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவி ஒரு 3600எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொண்டிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு மாதிரி

சேமிப்பு மாதிரி

உடன் சாம்சங் நிறுவனமானது 128ஜிபி மற்றும் 64ஜிபி ஆகிய இரண்டு சேமிப்பு மாதிரிகளில் 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எஸ்8 அக்கருவிகளை அறிமுகப்படுத்தலாம் என்றும் லீக்ஸ் தகவல்கள் அறிவிக்கின்றன.

இரட்டை பிக்சல் தொழில்நுட்பம்

இரட்டை பிக்சல் தொழில்நுட்பம்

இதுவொருபக்கம் இருக்க கேலக்ஸி எஸ்8 கருவியானது ஐபோன் 7 பிளஸ் போன்ற ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டிருக்கவில்லை மாறாக முந்தைய கருவிகள் போன்றே 12எம்பி இரட்டை பிக்சல் தொழில்நுட்பம் கேமரா கொண்டிருக்க வேண்டும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா அசத்தல் : பழைய மாடல்களில் புதிய நோக்கியா கருவிகள்.!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8 will come in two versions: 5.8-inch and 6.2-inch display. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X