அறிமுகம்: சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்-ன் புதிய ஸ்மார்ட்கேர்ள் எடிஷன்.!
சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் பொதுவாக 6.2-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (2960-1440) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
சாம்சங் நிறுவனம் தற்சமயம் புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி ஸ்மார்ட்போன்களை வெறும் 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் கண்டறிந்துள்ளது. மேலும் விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் SMARTgirl லிமிடெட் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கேலக்ஸி எஸ்8-க்கான புதிய பர்கண்டி சிவப்பு வண்ண விருப்பத்தை அறிமுகப்படுத்திய பின்னர், சாம்சங் இப்போது கேலக்ஸி எஸ்8 பிளஸ்-இன் புதிய வரையறுக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் SMARTgirl பதிப்பு ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ரோஸ் பிங்க் வண்ண விருப்பத்தை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் :
சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் பொதுவாக 6.2-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (2960-1440)
பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு :
கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 8895 சிப்செட் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய
செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3500எம்ஏஎச்:
சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications