அதிரடியாக சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட் போனுக்கு ரூ.12000 குறைப்பு.!
சாம்சங் நிறுவத்தின் கேலக்ஸ் எஸ்8 பிளஸ் ஸ்மார்ட் போன் கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் ரூ.64900க்கு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி 9 சீரியஸ் அதன் பிறகு ரூ.58900க
சாம்சங் நிறுவத்தின் கேலக்ஸ் எஸ்8 பிளஸ் ஸ்மார்ட் போன் கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய சந்தையில் ரூ.64900க்கு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி 9 சீரியஸ் அதன் பிறகு ரூ.58900க்கும் இந்தாண்டு ஏப்ரலில் ரூ.53,990 என விலை மாற்றி மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது மூன்றாவதாக ரூ.12 ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸ் எஸ்8 பிளஸ் ஸ்மார்ட் சிறப்பு:
சிறப்பு அம்சங்களை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் கியூஎச்டி+1440x2960 ரெசல்யூசன் உடன் சூப்பர் அமோல்டு டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் இருக்கின்றது.

12 டூயல் எம்பி கேமரா:
12 டூயல் எம்பி கேமரா பிக்சல் பிரைமரி கேமார, 8எம்பி செல்பி கேமராவும் இருக்கின்றது. எக்சைனோஸ் 8895 குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 நானோமீட்டர் என்ற அளவில் உலகின் மிகவும் மெல்லிய பிராசஸர் என்பது தனிச்சிறப்பு.

3500 எம்ஏஹெச் பேட்டரி:
மெமரியை பொறுத்தவரையில் 4 ரேம், 64 ஜிபி இன்டடெர்னல் மெமரியும் கூடுதலாக 256 ஜிபியும் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் பே வசதியும், 3500 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் இருக்கின்றன.

3ம் முறையாக விலை குறைப்பு:
முன்னதாக இருமுறை விலை குறைக்கப்பட்ட நிலையில் கேலக்ஸி எஸ்8 பிளஸ் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ரூ.12000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கேலக்ஸி எஸ்8பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ரூ.39,900க்கு வாங்கலாம்.

8 ஆயிரம் கேஷ்பேக்:
கேலக்ஸி எஸ்8 பிளஸ் புதிய விலையில் ஆப்பலைன் விற்பனை மையங்கள் சாம்சங் ஷாப் ஆன்லைன் தளம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விரைவில் புதிய விலையில் மாற்றப்படும் என தெரிகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி கேலக்ஸி எஸ்8 பிளஸ் வாங்குவோருக்கு பேடிஎம் சார்பில் ரூ.8000 வரை பேஷ்பேக் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications