Home
Mobile

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்8.!

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

இந்திய மொபைல் சந்தையில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் வரும் அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் மூலம் இந்த சாதனத்தை குறைந்த விலையில் வாங்க முடியும்.

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்8.!

சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.45,990-ஆக இருந்தது பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,990-க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி எஸ்8

கேலக்ஸி எஸ்8

கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 எக்ஸிநோஸ் 8895 செயலி

எக்ஸிநோஸ் 8895 செயலி

கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 8895 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன்.

கேமரா

கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

பேட்டரி

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8 Price in India Will Be Reduced to Rs 29990 During Festive Season: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X