அதிரடி விலைக்குறைப்பில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்.!
சாம்சங் கேலக்ஸி எஸ்8 பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது.!
சாம்சங் நிறுவனம் தற்போது அதிரடி விலைக் குறைப்பு ஒன்றை அறிவித்துள்ளது, 6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் என்ற ஸ்மார்ட்போனுக்கு ரூ.4,000 வரை விலைக் குறைத்துள்ளது, இதனால் பல்வேறு மக்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.74,990 விலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம், தற்போது 4,000 வரை விலைக்குறைத்து ரூ.70,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

6.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 6.2அங்குல முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் (2960-1440) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவைஇந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:
சாம்சங் கேலக்ஸி எஸ்8 பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு உள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

6ஜிபி ரேம்
இந்தக்கருவி 6ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 128ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இவற்றுள் அடக்கம், மேலும் ஆண்ட்ராய்டு 7.0(நௌகட்) மூலம் இந்த ஸ்மார்ட்போன்இயங்குகிறது.

பேட்டரி:
சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் பொருத்தவரை 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications