கேஷ்பேக் & புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்8.!
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் மாடல் இப்போது "பர்கன்டி ரெட் " நிறத்தில் கிடைக்கும் என சாம்சங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்த புதிய மாறுபாடுகள் கொண்ட ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல்-13 முதல் கிடைக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அட்டகாசமான கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.49,990-ஆக உள்ளது, பேடிஎம் சார்பில் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 8895 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications