இன்பினிட்டி டிஸ்பிளே & ஸ்னாப்டிராகன் 821 செயலி உடன் வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மினி.!
இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.!
சாம்சங் கேலக்ஸி எஸ் தொடர் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது, 2014-ல் அறிமுகப்படுத்தியுள்ள எஸ்5 மினி என்ற ஸ்மார்ட்போன் பல வரவேற்ப்பை பெற்றது.
கடந்த ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்6 மற்றும் கேலக்ஸி எஸ்7 மிகப்பெரிய லாபாத்தை கொடுத்தது. தற்போது வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மினி பொருத்தவரை இன்பினிட்டி டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 821 செயலி இடம்பெற்றுள்ளது மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

இன்பினிட்டி டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் இன்பினிட்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளன அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மினி ஸ்மாரட்போனும் இன்பினிட்டி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, மேலும் 5.3 அங்குல அளவு டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

தென்கொரியா:
முதலில் இந்த ஸ்மார்ட்போன் தென்கொரியா சந்தையில் அதிகமாக விற்ப்பனை செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 821:
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 821 செயலி கொண்டுள்ளது, மேலும் இதன் இயங்குதளம் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 மினி சென்சார் திறமை பாரட்டும் வண்ணம் உள்ளது.

4ஜிபி ரேம்:
இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications