Home
Mobile

மே 21: 16எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்8 லைட்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி வரும் மே 21-ம்
தேதி புதிய கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனை விட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் முதலில் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்8 லைட் :

கேலக்ஸி எஸ்8 லைட் :

கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

  ஸ்னாப்டிராகன்  சிப்செட்:

ஸ்னாப்டிராகன் சிப்செட்:

கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போனில் 1.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும்
ஐரிஸ் சென்சார் போன்;ற வசதிகளுகம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்புகள் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன்
வெளிவரும்.

 16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை, இருந்தபோதிலும் எஸ்8 லைட் ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் வந்த வண்ணம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8 Lite Launch Set for May 21; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X