5.8-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்8 லைட்.!
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போன் ஆனது, கைரேகை ஸ்கேனர் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ போன்ற சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி எஸ்8 லைட்:
கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எஸ்8 லைட் ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 விட சிறந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.


3000எம்ஏஎச்:
கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications